- Home
- Gallery
- தொட்டதெல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்.. ரூ.3100 கோடி சொத்து.. இந்தியாவின் பணக்கார ஸ்டார் கிட் இவர் தான்..
தொட்டதெல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்.. ரூ.3100 கோடி சொத்து.. இந்தியாவின் பணக்கார ஸ்டார் கிட் இவர் தான்..
நாட்டின் பணக்கார நட்சத்திரக் குழந்தையின் சொத்து மதிப்பைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

பொதுவாக சினிமா பிரபலங்களின் நட்சத்திர பிள்ளைகள் பிறக்கும் போதே ஆடம்பர சொகுசு வசதிகளுடன் தான் பிறக்கின்றன. பாலிவுட்டில் நட்சத்திர பிள்ளைகளின் ஆதிகம் அதிகம் என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் நாட்டின் பணக்கார நட்சத்திரக் குழந்தையின் சொத்து மதிப்பைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார நட்சத்திரக் குழந்தையின் சொத்து மதிப்பு ரூ.3,100 கோடி ஆகும்..
Hrithik Roshan
உண்மை தான்.. இந்தியாவின் பணக்கார நட்சத்திரக் குழந்தை ஹிருத்திக் ரோஷன். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராப ராகேஷ் ரோஷன் மற்றும் பிங்கி ரோஷன் ஆகியோரின் மகன் ஹ்ரித்திக் ரோஷன். தற்போது 50 வயதாகும் ஹ்ரித்திக் ரோஷனின் சொத்து மதிப்பு ரூ.3,100 கோடி என்று கூறப்படுகிறது.
ஹிருத்திக் ரோஷன் இந்தியாவின் பணக்கார நட்சத்திரக் குழந்தை. 3100 கோடி நிகர மதிப்புடன், நடிகர் இந்தியாவின் அனைத்து நடிகர்களின் குழந்தைகளிலும் பணக்காரர் ஆவார். இந்தியாவில் உள்ள மற்ற பிரபல நட்சத்திரக் குழந்தைகளின் சொத்து மதிப்பு அவரை விட குறைவாகவே உள்ளது.
உதாரணமாக, ரன்பீர் கபூரின் சொத்து மதிப்பு ரூ.345 கோடியாகும், ஆலியா பட்டின் சொத்து மதிப்பு ரூ.550 கோடி என்றும், கரீனா கபூரின் சொத்து மதிப்பு ரூ.485 கோடியும் என்றும் கூறப்படுகிறது. ராம் சரண் ரூ. 1300 கோடி சொத்து மதிப்பை கொண்டுள்ளார்.
ஹ்ருத்திக் ரோஷன் கடைசியாக வெளியான ஃபைட்டர் படத்தில் நடித்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்றாக இருந்தது. ஹ்ருத்திக் ஒரு படத்திற்கு ரூ 100 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்றும் கூறப்படுகிறது..
ஹிருத்திக் ரோஷன் 2000 ஆம் ஆண்டில் கஹோ நா... பியார் ஹை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த அவர், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். கடந்த இரண்டு தசாப்தங்களில், அவர் கிரிஷ், தூம் 2, ஜோதா அக்பர், அக்னிபத், காபில் மற்றும் பல போன்ற பல பிளாக்பஸ்டர் படங்களை வழங்கியுள்ளார்.
திரைப்படங்களைத் தவிர, விளம்பரங்கள், சமூக ஊடக இடுகைகள், தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் (ஃபிலிம் கிராஃப்ட் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்), தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டார்ட்-அப்களில் முதலீடுகள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து கணிசமான தொகையை ஹிருத்திக் ரோஷன் சம்பாதிக்கிறார். HRX எனப்படும் விளையாட்டு ஆடை நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். அந்நிறுவனம் தற்போது சுமார் ரூ.7,300 கோடி மதிப்புடையது.
மும்பையில் ஒரு ஆடம்பரமான கடல் முகப்பு வீடு, லோனாவாலாவில் ஒரு ஃபார்ம் ஹவுஸ் உள்ளிட்ட பல ஆடம்பர வீடுகள் ஹ்ருத்திக் ரோஷனுக்கு உள்ளது. விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் II, மெர்சிடிஸ் மேபேக் மற்றும் மசராட்டி ஸ்பைடர் உள்ளிட்ட ஏராளமான சொகுசு கார்களும் அவரிடம் உள்ளன.
ஹிருத்திக் ரோஷன் தற்போது ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானியுடன் இணைந்து நடிக்கும் வார் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இதே போல் அவரின் க்ரிஷ் 4 படமும் தயாராகி வருகிறது. இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம் VFX இல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அதன் பட்ஜெட்டும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.