MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரவீனாவுக்கு ஸ்டோர் ரூமில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி!! கமல் கொடுத்த சர்பிரைஸ்... கண்ணீர் விட்ட தருணம்!

ரவீனாவுக்கு ஸ்டோர் ரூமில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி!! கமல் கொடுத்த சர்பிரைஸ்... கண்ணீர் விட்ட தருணம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃபிரீஸ் டாஸ்க் நடந்து முடிந்த நிலையில், தற்போது... ரவீனாவுக்கு கமல்ஹாசன் அகம் டிவி வழியாக தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 23 2023, 09:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, 80 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. மேலும் கடந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்த ஃபிரீஸ் டாஸ்க் நடந்த நிலையில், ஹவுஸ் மேட்ஸ் சண்டை போடுவதை மறந்து... சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

குறிப்பாக நேற்றைய தினம், விசித்ராவின் கணவர் ஷாஜு, மற்றும் அவரின் மூன்று பிள்ளைகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். கணவரை பார்த்ததும் கட்டிப்பிடித்து விசித்ரா அழுதது... பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே உருக வைத்தது. மேலும் விச்சு - ஷாஜுவின் காதலின் ஆழத்தை இந்த சந்திப்பு உணர்த்தியதாகவே பார்க்கப்பட்டது.

Vichithra: விசித்ராவின் திரை வாழ்க்கைக்கு ஆப்பு வைத்ததே சத்யராஜ் தானா? விச்சு போட்ட பழைய பதிவு வைரல்!

35

ப்ரீஸ் டாஸ்கிங் போது... போட்டியாளர்களுக்கு நெருக்கமானவர்கள், பெற்றோர், சகோதர, சகோதரி என பலர் வந்த போதும்... ரவீனாவின் அம்மா மட்டும் உடல்நல பிரச்சனை காரணமாக வரவில்லை என கூறப்பட்டது. ரவீனாவின் அம்மாவுக்கு பதிலாக அவரின் சித்தி மற்றும் அவரின் மகன் உள்ளே வந்தனர். ரவீனாவின் விளையாட்டை தனியாக ஆடும் படி சொன்னதோடு, மணியுடன் பழக வேண்டாம் என எச்சரித்து சென்றார்.

45

எனினும் தன்னுடைய அம்மாவுக்காக காத்திருந்த ரவீனாவுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம் என்றாலும் அதனை அவர் பெரிதாக வெளியே காட்டிக்கொள்ளவில்லை. இன்றைய நிகழ்ச்சியில் இதுகுறித்து கமல் கேட்டபோது ’அம்மா வரவில்லை என்று நான் வருத்தமாக இருந்தால், நான் வருத்தமாக இருப்பதை பார்க்கும் என்னுடைய வீட்டினர் வருத்தப்படுவார்கள் என்று தான் நான் அதை அடக்கி கொண்டேன் என்று கூறினார்.

அட்ஜஸ்ட் பண்ண சொல்றாங்க..! இன்ஃபெக்ஷன் ஆகிடுச்சு! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அவலம்... அம்மு அமிராமி ஆதங்கம்!

55

இதனை அடுத்து ஸ்டோர் ரூமில் சென்று பாருங்கள் உங்களுடைய குழப்பத்திற்கு ஒரு பதில் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று கமல் கூற.... உடனே ரவீனா ஸ்டோர் ரூம் சென்று பார்த்தபோது அங்கு அவருடைய அம்மா இருந்ததை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார். ரவீனாவை பார்த்து அவருடைய அம்மாவும் ஆனந்த கண்ணீர் வடிக்க, அவருடைய கண்களை ரவீனா துடைத்து விட்டார். பின்னர் சாக்லேட் கொடுத்து, சாப்பாடு ஊட்டி விட்டு ரவீனாவின் அம்மா பாசத்தை பொழிந்தாலும்... மணி விஷயத்தை எப்படி எடுத்து கொள்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved