பாகுபலியவே புரட்டி எடுத்த வில்லனை ஒரு கை பார்க்க ரெடியான ரஜினி... தலைவர் 170 படத்தில் இணைந்த மாஸ் நடிகர்
த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படத்தில் பிரபல மாஸான வில்லன் நடிகர் இணைந்துள்ளார்.
Rajinikanth
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததை அடுத்து அவர் நடிப்பில் அடுத்ததாக தலைவர் 170 திரைப்படம் தயாராக உள்ளது. இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
Rajinikanth, TJ Gnanavel
தலைவர் 170 படத்த்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீசாக நடிக்க உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இதில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் மற்றும் இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Rana Daggubati
அதன்படி முதலாவதாக பாகுபலி படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் ராணா டகுபதி இப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்க உள்ளார் ராணா. இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்படம் பான் இந்தியா அளவில் மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thalaivar 170
தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக போலீஸ் கெட் அப்பில் நடிக்க உள்ள ரஜினிகாந்திற்கு ஏற்கனவே லுக் டெஸ்ட்டும் எடுக்கப்பட்டுவிட்டது. ஜெயிலரில் ரஜினி போலீசாக வரும் ஒரு சில காட்சிகளுக்கே செம்ம ரெஸ்பான்ஸ் கிடைத்த நிலையில், தலைவர் 170 படம் முழுக்க அவர் போலீசாக வர உள்ளதால் இப்படம் செம்ம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்...துபாயில் என்ன நடந்தது? 5 ஆண்டுக்கு பின் மனைவி ஸ்ரீதேவியின் மரணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்த போனி கபூர்