- Home
- Gallery
- Ramarajan: ஏமாற்றத்தில் முடிந்த 12 வருட காத்திருப்பு! 'சாமானியன்' தோல்வியால் ராமராஜன் எடுத்த அதிரடி முடிவு!
Ramarajan: ஏமாற்றத்தில் முடிந்த 12 வருட காத்திருப்பு! 'சாமானியன்' தோல்வியால் ராமராஜன் எடுத்த அதிரடி முடிவு!
நடிகர் ராமராஜன் 12 வருடத்திற்கு பின் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த 'சாமானியன்' திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக பணியாற்றி பின்னர் ஹீரோவாக நடித்தவர் தான் ராமராஜன். தற்போதைய ஹீரோக்கள் விதவிதமான கெட்டப்பில் நடித்து ரசிகர்களை கவர்கின்றனர். ஆனால் ராமராஜனோ, நீல டவுசர், வெட்டி சட்டை, என எந்த வெரைட்டியும் காட்டாமல் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ள நடிகர்.
ramarajan
இவர் பீக்கில் இருந்த சமயத்தில், வாரம் தோறும் ஒரு ராமராஜன் படம் வெளியாகி வெற்றி நடை போடும். அப்படி பிசியாக நடித்து கொண்டிருந்த இவர், அரசியலில் கால் பதித்த பின்னர் தடம் மாறி... தடுமாறி போனதால், மனைவி நளினியை விட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
காதல் கணவர் கைவிட்ட போதும், ஒரு இரும்பு பெண்ணாக போராடி... இரண்டு பிள்ளைகளையும் கரை சேர்த்த நளினி, ராமராஜனுக்கு உடல்நிலை முடியாமல் இருந்த போது , ஆதரவு கொடுத்து அரவணைத்தார். இருவரும் தற்போது, கணவன் மனைவியாக வாழவில்லை என்றாலும் பிள்ளைகளுக்காக ஒரு நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.
ramarajan
சினிமாவில் இருந்து சுமார் 10 வருடங்களுக்கு மேல் ஒதுங்கி இருந்த ராமராஜன், தன்னை குணசித்திர வேடத்தில் அணுகும் இயக்குனர்களிடம், நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறி வந்தார். இதைதொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் நடித்த ’சாமானியன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று போட்ட பணத்தை கூட எடுக்காமல் படு தோல்வியை சந்தித்துள்ளது.
13 வயதில் ஹீரோயின்! இளம் நடிகருடன் காதல் தோல்வி? வாய்ப்புக்காக ஏங்கும் இந்த ஹீரோயின் யார் தெரியுமா?
இப்படத்தின் தோல்வி மூலம், தற்போதைக்கு தனக்கு மார்க்கெட் இல்லை என்பதை புரிந்து கொண்டுள்ள ராமராஜன், தன்னை வைத்து படம் இயக்கம் தயாரிப்பாளர்கள் ஒருபோதும் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை சந்திக்க கூடாது என அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
ramarajan
அதாவது முன்னணி நடிகர்களின் படங்களில், ஹீரோவுக்கு இணையான வெயிட்டான கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்க முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே இதுபோல் பல வாய்ப்புகளை தவற விட்ட ராமராஜனின் இந்த முடிவு, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனினும் இது போன்ற வாய்ப்பு மூலம் விட்ட இடத்தை ராமராஜன் பிடிப்பாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.