MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • குடிச்சிட்டு தினமும் அடி! காசு கேட்டு டார்ச்சர்.. நடிகர் முனிஷ் ராஜா பற்றி கூறி கதறிய ராஜ்கிரண் மகள் பிரியா!

குடிச்சிட்டு தினமும் அடி! காசு கேட்டு டார்ச்சர்.. நடிகர் முனிஷ் ராஜா பற்றி கூறி கதறிய ராஜ்கிரண் மகள் பிரியா!

சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ராஜ் கிரணின் வளர்ப்பு மகள் தற்போது பிரபல youtube சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 05 2024, 11:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் முன்னணி இடத்தை பிடித்தவர் ராஜ்கிரண். இவருடைய வளர்ப்பு மகளான பிரியா, கடந்த 2022 ஆம் ஆண்டு நாதஸ்வரம் சீரியல் நடிகர் முனிஷ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

28

பேஸ்புக் மூலம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. முதலில் தன்னுடைய மகளின் வாழ்க்கையை கருதி ராஜ்கிரண் முனீஸ் ராஜா குறித்து விசாரித்தபோது, அவர் சரியில்லை என்பது தெரிய வந்ததும் இது குறித்து பிரியாவிடம் பேசி, வேறு இடத்தில் நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். ஆனால் பிரியா முனீஸ் ராஜாவின் மீது உள்ள காதலுக்காக பெற்றோரை அசிங்கப்படுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

Trisha: த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பார்ட்.. 18 வருடத்திற்கு பின் 68 வயது நடிகருக்கு ஜோடியான சவுத் குயின்!

38

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக அவ்வப்போது புகைப்படம் போட்டு தெரிவித்து வந்தார் பிரியா. காதல் மனைவிக்காக முனீஸ் ராஜா 50 லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றையும் கட்டி கொடுத்ததாக கூறப்பட்டது.

48

ஆனால் திருமணமான ஒரே வருடத்தில் தற்போது பிரியா முனீஸ் ராஜாவை பிரிந்து விட்டதாக சமீபத்தில் வீடியோ மூலம் தெரிவித்தார். இந்த வீடியோவில்... "முனீஷ்  ராஜாவை பிரிந்து இரண்டு மாதமாகி விட்டதாகவும், எங்களுடைய திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட திருமணம் கிடையாது. இந்த திருமணத்திற்கு பின்னர் என்னுடைய வளர்ப்பு தந்தையை நான் மிகவும் மோசமாக பேசி விட்டேன். அவருடைய பேச்சைக் கேட்கவில்லை என்றாலும், நான் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதை அறிந்து, அவர் எனக்கு உதவினார்.  இது நான் எதிர்பாக்காத கருணை. நான் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது என கண்ணீருடன் பேசி இருந்தார்.

50 கிளைகள்! 100 கோடி வருமானம்! அப்பா இறப்பதற்கு முன் இதை சொன்னார்! சாதித்த எம்.எஸ்.விஸ்வநாதன் மகள்!

58

இதைத் தொடர்ந்து பிரியா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பிரியா அளித்துள்ள பேட்டியில், "முனீஷ் ராஜாவை திருமணம் செய்து கொள்வதற்காக என்னுடைய அம்மா, அப்பா, என அனைவரையுமே பகைத்துக் கொண்டேன். இந்த மாதிரி ஒரு சூழ்நிலை எந்த ஒரு பெண்ணிற்கும் வரக்கூடாது. அனைத்து பெண்களும் ஆசைப்படும் ஒரு திருமண கனவோடு தான் இந்த வாழ்க்கையை நான் தொடங்கினேன். ஆனால் இந்த வாழ்க்கையில் எனக்கு எதிராக மாறிவிட்டது.

68

ஒரு கட்டத்திற்கு மேல் இனி எதையும் மாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். திருமணமான முதல் மாதத்திலேயே அவருக்கும் எனக்கும் பிரச்சினைகள் வரத் தொடங்கி விட்டன. என கூறியுள்ள பிரியா அவரை விட்டு வெளியேற நினைத்த போதெல்லாம் என்னுடைய கொன்று விடுவேன் என மிரட்டியே அடக்கி விட்டார் என கதறி அழுதுள்ளார்.

69 வயதிலும்... மனைவி ராதிகா மீது குறையாத காதல் ! 23 ஆம் ஆண்டு திருமண நாளில் சரத்குமார் கொடுத்த சர்பிரைஸ்!

78

மேலும் முனீஷ் ராஜா பயங்கரமா குடிப்பவர் என்றும், தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடிப்பதோடு மட்டுமில்லாமல் கண்டபடி பேசுவார். காலை விடிந்த பின்னர் அவருக்கு எதுவுமே நினைவில் இருக்காது. ரொம்ப இயல்பா இருப்பாரு.  அவரின் குடி பழக்கத்தை மாற்ற முடியும் என நம்பினேன் ஆனால் முடியவில்லை. அதே போல் என்னிடம் பணம் கேட்டு பல முறை டார்ச்சர் செஞ்சிருக்காரு. நான் என்னுடைய நண்பர்களிடம் கேட்டு வாங்கி கொடுத்திருக்கேன். இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது என தெரிவித்துள்ளார். 

88

நடிகர் ராஜ்கிரண் தனக்கு மகளே இல்லை என கூறி ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு... தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்திய நிலையில், மீண்டும் ப்ரியாவை ஏற்றுக்கொள்வாரா? மகள் பிரியாவுக்கு என்ன பதில் சொல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சூர்யா 3 வேடத்தில் கலக்கிய '24' படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஹீரோயினிலும் ஏற்பட்ட மாற்றம்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved