தனுஷ் உடன் ஓவர் நெருக்கம்... நடிகை அமலா பாலை வீடு தேடிச்சென்று பாட்ஷா பாணியில் மிரட்டிய ரஜினிகாந்த்..!
நடிகை அமலா பால் தனது மருமகன் தனுஷ் உடன் நெருக்கமாக பழகியதை அறிந்து நடிகர் ரஜினிகாந்த், அவரது வீடு தேடிச்சென்று மிரட்டியதாக பிரபல பத்திரிகையாளர் கூறி உள்ளார்.
amala paul, dhanush, Rajinikanth
மலையாள நடிகையான அமலாபாலுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது தமிழ் படங்கள் தான். தமிழில் இவர் நடித்த மைனா, தெய்வத் திருமகள், வேலையில்லா பட்டதாரி, ராட்சசன் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்த அமலா பால், சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
AL vijay, Amala Paul
திருமணத்துக்கு பின்னரும் நடிகை அமலாபால் சினிமாவில் நடித்து வந்தார். இது ஏ.எல்.விஜய் குடும்பத்துக்கு பிடிக்காததால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இதனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே நடிகை அமலா பால் விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களின் பிரிவுக்கு தனுஷ் - அமலா பால் இடையேயான நெருக்கமும் ஒரு காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது. வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தபோது அவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தை தாண்டிய உறவாக மாறியதாக கிசுகிசுக்கள் உலா வந்தன.
Amala Paul
தனுஷ் - அமலா பால் இடையேயான நெருக்கம் ஒருகட்டத்தில் தனுஷின் மாமனாரான ரஜினிகாந்துக்கு தெரியவந்து, அவர் அமலா பாலின் வீடு தேடிச் சென்று மிரட்டிய சம்பவம் அரங்கேறியதாக பிரபல சினிமா பத்திரிகையாளரான செய்யாறு பாலு கூறி இருக்கிறார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது : “கேரளாவில் சாதாரண ஒரு மிடில் கிளாஸ் பேமிலியில் பிறந்தவர் தான் அமலா பால். அவரது அம்மா ஒரு போலீஸ். மாடலிங் துறைமீது மகளுக்கு இருந்த ஆசை அறிந்த அவர் அதற்கு உதவியாக இருந்துள்ளார்.
இதையும் படியுங்கள்... அப்படி நடித்த சமயத்தில் எனக்கு 15 புருஷன் இருப்பதாக நினைத்து கொண்டேன்! பகீர் கிளப்பிய அமலா பால் பேச்சு!
Actress Amala Paul
பின்னர் தமிழ் சினிமாவுக்கு வந்து ஆரம்பத்தில் வீரசேகரன் என்ற படத்தில் நடித்தார். அது தோல்வியடைய, சிந்து சமவெளி என்கிற சர்ச்சைக்குரிய படத்தில் நடித்த அமலா பாலுக்கு மைனா திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்து உச்சத்துக்கு சென்றுவிட்டார். தலைவா படத்தில் ஒர்க் பண்ணும்போது ஏ.எல்.விஜய் மீது அமலா பாலுக்கு காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு ஏ.எல்.விஜய் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதையெல்லாம் மீறி தான் அமலா பாலை கரம்பிடித்தார்.
Amala paul, dhanush
திருமணத்துக்கு பின்னரும் சினிமா ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு இரவு லேட்டாக வீட்டுக்கு வருவது, ஏ.எல்.விஜய்யின் குடும்பத்தினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பின்னர் இதுவே பெரும் பிரச்சனையாக மாறி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த விவாகரத்திற்கு தனுஷின் சில்மிஷமும் ஒரு காரணம். வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அமலா பால் உடன் நெருக்கம் ஏற்பட்டு அவரது வீட்டிலேயே தங்க ஆரம்பித்துள்ளார் தனுஷ்.
dhanush amalapaul
இந்த விவகாரம் ரஜினியின் காதுக்கு செல்ல, மகளின் வாழ்க்கைக்காக அமலா பாலின் அப்பார்ட்மெண்ட்டுக்கே சென்று அவரை எச்சரித்துள்ளார். தனுஷ் ஒரு குடும்பஸ்தன், அவருக்கும் மனைவி, குழந்தைகள் எல்லாம் இருக்கு, அவர விட்டுடுங்க இல்லேனா ரஜினியின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியதிருக்கும் என மிரட்டி இருக்கிறார். இவையெல்லாம் அப்போது அரசல் புரசலாக செய்தியாக வெளிவந்தன. இந்த சம்பவத்துக்கு பின் அமலாபாலுக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் அவர் கேரளாவுக்கு போய்விட்டார்” என செய்யாறு பாலு கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... பிகினி உடையோடு வந்து ஓப்பன் பாரில் பீர் அடித்த அமலாபால்... போட்டோ பார்த்து போதையான ரசிகர்கள்