MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஐஸ்வர்யா என்னுடைய 2-வது தாய்... தன்னுடைய சிங்கப்பெண்கள் பற்றி பேசி கண்கலங்கிய ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா என்னுடைய 2-வது தாய்... தன்னுடைய சிங்கப்பெண்கள் பற்றி பேசி கண்கலங்கிய ரஜினிகாந்த்

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா தன்னுடைய இரண்டாவது தாய் என எமோஷனலாக பேசி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 27 2024, 09:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படம் லால் சலாம். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இதற்கு இசையமைத்து உள்ளார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவர்களுடன் தம்பி ராமையா, தங்கதுரை, தன்யா பாலகிருஷ்ணன், ஜீவிதா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. முக்கியமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் இதில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.

25

ரஜினி கேமியோ ரோலில் நடித்திருந்தாலும் இது ரஜினி படமாகவே புரமோட் செய்யப்படுகிறது. அந்த வகையில் லால் சலாம் படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா பற்றி எமோஷனலாக பேசி இருந்தார். அதைப்பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... "அப்பாவை சங்கி என்று சொல்லும்போது கோவம் வரும்".. லால் சலாம் ஆடியோ லாஞ்சு - உணர்ச்சிவசமாக பேசிய ஐஸ்வர்யா!

35

அவர் கூறியதாவது : “லால் என்றால் சிவப்பு, லால் என்றால் வன்முறை. லால் என்றால் ஆபத்து. லால் என்றால் புரட்சி. ஐஸ்வர்யா அந்த புரட்சியை தான் கையில் எடுத்திருக்காங்க. ஐஸ்வர்யா இந்த படத்தை பத்தி என்கிட்ட சொல்லும்போது, இது தேசிய விருது வாங்கும்னு சொன்னாங்க. அப்போவே நான் பேக் அடிச்சுட்டேன். நான் அவார்டுக்கு எதிரானவன் அல்ல, எனக்கு தேவை ரிவார்டு, டப்பு வேணும். ஆனா கதையை கேட்டதுக்கு அப்புறம் பண்ணலாம்னு நினைச்சேன்.

45
Lal salaam

Lal salaam

லால் சலாம் கதையை ஐஸ்வர்யா நிறைய தயாரிப்பாளர்களிடம் சொன்னார். நிறைய பேர் ரிஜக்ட் பண்ணிட்டாங்க. அதனால படம் தாமதம் ஆச்சு. இறுதியா திருக்குமரன் கதையை கேட்டதும் ஓகே சொல்லிவிட்டார். அப்போ நான் இதில் மொய்தீன் பாய் ஆக நடிப்பது உறுதி ஆகல. அதில் ஒரு பெரிய ஸ்டார் அல்லது ஒரு புது ஆள் நடிக்கனும்னு விஷ்ணு கிட்ட சொன்னேன். அதுக்கப்புறம் நானே பண்ணலாம்னு யோசிச்சேன். இதை ஐஸ்வர்யா கிட்ட சொன்னப்போ அவங்க முகத்துல எந்த ரியாக்‌ஷனுமே இல்ல. இது ரொம்ப சென்சிடிவ் ஆன கதை என்பதால் நடிக்க ஓகே சொன்னேன்.

55

ஐஸ்வர்யா எனக்கு 2-வது தாய் மாதிரி, கடவுள் கிட்ட ஆண் குழந்தை வேணும்னு கேட்டா நீ போ நீ போனு அனுப்பி வைப்பார். ஆனால் பெண் குழந்தை கேட்டால் நானே வருகிறேன் என்று கடவுளே வந்து பிறப்பார். அப்படி தான் என்னுடைய 2 மகள்களும். என்னைப்பொருத்தவரை ஐஸ்வர்யா என்னுடைய இரண்டாவது தாய் என சொல்லி எமோஷனல் ஆனார் ரஜினிகாந்த்.

இதையும் படியுங்கள்...  மறைந்த பாடகர்களுக்கு உயிர் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்... AI-ஐ வைத்து லால் சலாமில் இசைப்புயல் நிகழ்த்திய மேஜிக்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved