MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ராஜமவுலி இயக்கும் அடுத்த பிரம்மாண்ட படத்துக்கு விஜய் சேதுபதி பட டைட்டிலா? காத்துவாக்குல கசிந்த தகவல்

ராஜமவுலி இயக்கும் அடுத்த பிரம்மாண்ட படத்துக்கு விஜய் சேதுபதி பட டைட்டிலா? காத்துவாக்குல கசிந்த தகவல்

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள புதிய பிரம்மாண்ட படத்திற்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Mar 04 2024, 03:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Mahesh Babu, Rajamouli

Mahesh Babu, Rajamouli

தெலுங்கில் மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களை கொடுத்தவர் தான் ராஜமவுலி. அவர் இயக்கத்தில் அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்க உள்ளார். அப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இண்டியானா ஜோன்ஸ் பாணியில் ஒரு சாகசப் பயணம் குறித்த படமாக இப்படத்தின் திரைக்கதையை அமைத்து வருகிறாராம் இயக்குனர் ராஜமவுலி. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

24
Director Rajamouli

Director Rajamouli

அதுமட்டுமின்றி இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளில் தான் படமாக்கப்பட உள்ளதாம். அதுமட்டுமின்றி மிருகங்கள் சம்பந்தமான காட்சிகளும் இப்படத்தில் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்தக் காட்சிகளை இந்தியாவில் படமாக்க பல்வேறு நிபந்தனைகள் இருக்கும் என்பதால் வெளிநாட்டில் அக்காட்சியை படமாக்க இயக்குனர் ராஜமவுலி திட்டமிட்டு இருக்கிறாராம்.

இதையும் படியுங்கள்... Sunaina Ice Meditation: ஐஸ் பாத் ஓகே... இது என்ன ஐஸ் தியானம்? வைரலாகும் நடிகை சுனைனாவின் போட்டோஸ்!!

34
Rajamouli Next Movie

Rajamouli Next Movie

ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் புலியுடன் சண்டையிடும் காட்சிக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்ததை போல் மகேஷ் பாபு படத்திலும் மிருகங்களுடன் ஏராளமான காட்சிகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. அதோடு இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக இந்தோனேசியாவை சேர்ந்த செல்சீ இஸ்லன் என்கிற நாயகி தான் நடிக்க உள்ளாராம். 

44
RajamouliNext Movie Title

RajamouliNext Movie Title

இந்த நிலையில், ராஜமவுலி - மகேஷ் பாபு இணையும் படத்தில் டைட்டில் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி அப்படத்துக்கு மஹாராஜா என பெயரிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். ஆனால் ஏற்கனவே விஜய் சேதுபதியின் 50-வது படத்திற்கும் மகாராஜா என பெயரிடப்பட்டு இருக்கிறது. இப்படத்தை குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் இயக்கி இருக்கிறார். தற்போது அதே தலைப்பை ராஜமவுலியும் வைக்க திட்டமிட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... தல-ஐ மெர்சலாக்கிய ஜவான்... அம்பானி மகன் திருமண விழாவில் அட்லீக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி - வைரல் வீடியோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராஜமௌலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved