- Home
- Gallery
- Sunaina Ice Meditation: ஐஸ் பாத் ஓகே... இது என்ன ஐஸ் தியானம்? வைரலாகும் நடிகை சுனைனாவின் போட்டோஸ்!!
Sunaina Ice Meditation: ஐஸ் பாத் ஓகே... இது என்ன ஐஸ் தியானம்? வைரலாகும் நடிகை சுனைனாவின் போட்டோஸ்!!
நடிகை சுனைனா, ஐஸ்கட்டிகளை நிரப்பி டப்புக்குள் அமர்ந்து... தியானம் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கி, பின்னர் நடிகையாக மாறியவர் சுனைனா. தெலுங்கில் 'குமார் Vs குமாரி' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு, எடுத்த எடுப்பிலேயே யாரும் ஹீரோயின் வாய்ப்பை கொடுக்க வில்லை, சிறு சிறு வேடங்களில் நடித்து... தன்னுடைய திறமையை நிரூபித்த பின்னரே ஹீரோயினாக புரோமோட் ஆனார்.
தெலுங்கை தொடர்ந்து தமிழில் சுனைனாவுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி. பிரசாத் இயக்கத்தில் சைக்கோலஜி திரில்லராக வெளியான 'காதலில் விழுந்தேன்' படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார். இவர் நடித்த முதல் படமே... அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
நகுல் - சுனைனா கெமிஸ்ட்ரி ரசிகர்களை மிகவும் கவர்ந்த நிலையில், இரண்டாவது முறையாக இந்த ஜோடி 'மாசிலாமணி' படத்தில் ஒன்று சேர்ந்தனர். இந்த படம் நடிக்கும் போதே இவ்ரகள் இருவரும் காதலித்து வருவதாக, வதந்திகள் பரவிய நிலையில்... இந்த படத்திற்கு பின்னர் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
தமிழி சினிமாவில் தற்போது வரை நிலையான இடத்தை பிடிக்க போராடிவரும் சுனைனா... கடந்த இரண்டு வருடங்களாக கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும், கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக கதையின் நாயகியாக 'ரெஜினா' படத்தில் நடித்திருந்தார். சுனைனா அதிகம் எதிர்பார்த்த இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. திரைப்படங்கள் மட்டும் இன்றி சில வெப் சீரீஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
எவ்வளவு பிஸியாக இருந்தாலும்... தன்னுடைய ஃபிட்னஸில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் சுனைனா... தற்போது ஐஸ் மெடிடேஷன் செய்யும் வீடியோவை வெளியிட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார். உடலில் உள்ள நரம்புகள் மற்றும் தசையை பலப்படுத்துவதற்காகவும், உடல் வலிகளை போக்கவும், பிரபலங்கள் ஐஸ் பாத் எடுப்பது வழக்கமான ஒன்று தான், ஆனால் நடிகை சுனைனா... ஐஸ் மெடிடேஷன் செய்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.