ராகவா லாரன்ஸுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? இவ்ளோ நாளா எங்க மாஸ்டர் ஒளிச்சி வச்சிருந்தீங்க!
Raghava Lawrence daughter raghavi : தமிழ் திரையுலகில் நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கி வரும் ராகவா லாரன்ஸின், மகள் ராகவியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Raghava Lawrence daughter
டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் சினிமாவுக்கு வரும் முன் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனிடம் கார் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது எதர்ச்சியாக ஒரு நாள் லாரன்ஸ் டான்ஸ் ஆடுவதை பார்த்து வியந்துபோன ரஜினிகாந்த், அவரை டான்சர்ஸ் யூனியனில் சேர்த்துவிட உதவி உள்ளார். இதையடுத்து ரஜினியின் உழைப்பாளி, ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் போன்ற படங்களில் குரூப் டான்சராக பணியாற்றினார் லாரன்ஸ்.
Raghavi Lawrence
இதையடுத்து 1999-ம் ஆண்டு வெளிவந்த ஸ்பீடு டான்ஸர் என்கிற தெலுங்கு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான லாரன்ஸுக்கு முனி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார் லாரன்ஸ். அப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து அதன் அடுத்த பாகத்தை காஞ்சனா என்கிற பெயரில் எடுத்தார் லாரன்ஸ். கடந்த 2011-ம் ஆண்டு வெளிவந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
Raghavi
அதன்பின்னர் காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்களையும் இயக்கி வெற்றிகண்டார் லாரன்ஸ். தற்போது நடிகராக பிசியாகிவிட்டதால் படம் இயக்குவதில் இருந்து சற்று ஓய்வெடுத்து உள்ளார் லாரன்ஸ். அவர் நடிப்பில் தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி உள்ளது. பி.வாசு இயக்கிய இப்படத்தில் வேட்டையனாக நடித்திருக்கிறார் லாரன்ஸ். இப்படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது அதன் புரமோஷன் பணிகள் பிசியாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள்... இனியா முதல் கயல் வரை.. இளம் வயதில் கதையின் நாயகியாக கலக்கும் super cute ஹீரோயின்ஸ்!
Raghava Lawrence with raghavi
நடிகர் லாரன்ஸை போல் அவரது தம்பி எல்வினும் தற்போது கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். அவர் நடிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமாவை தாண்டி மிகப்பெரிய அளவில் சமூக சேவைகளும் செய்து வருகிறார் லாரன்ஸ். ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்களுக்கு உதவுவது என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் லாரன்ஸ்.
Raghava Lawrence wife latha
லாரன்ஸை பற்றி அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அவரது குடும்பத்தினர் பற்றி பெரியளவில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. லாரன்ஸின் மனைவி பெயர் லதா. சமூக சேவைகள் செய்வதில் கணவருக்கு பக்கபலமாக இருந்து வருவது லதா தான். அதுமட்டுமின்றி லதாவை திருமணம் செய்த பின்னர் தான் டான்ஸ் மாஸ்டர் ஆனேன், சினிமாவில் இந்த அளவுக்கு உயர்ந்தேன், அவர் தனக்கு ஒரு லக்கி சார்ம் என பேட்டிகளில் கூறி இருக்கிறார் லாரன்ஸ்.
Raghava Lawrence daughter raghavi
லாரன்ஸ் - லதா ஜோடிக்கு ராகவி என்கிற மகளும் உள்ளார். லாரன்ஸுக்கு மகள் இருக்கா என ஷாக் ஆகாதீங்க. அவர் தற்போது சினிமா ஹீரோயின் போல மளமளவென வளர்த்துவிட்டார். அவர் மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவ்ளோ நாளா உங்க பொண்ண எங்க மாஸ்டர் ஒளிச்சி வச்சிருந்தீங்க என கேட்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் ராகவி.
இதையும் படியுங்கள்... உன்னை ஏமாத்திவிடுவார்கள்.. அம்மா மஞ்சுளாவுடன் கடைசி நிமிடங்கள் - வனிதா பகிர்ந்த செய்தி - ஒரு சின்ன Rewind!