உன்னை ஏமாத்திவிடுவார்கள்.. அம்மா மஞ்சுளாவுடன் கடைசி நிமிடங்கள் - வனிதா பகிர்ந்த செய்தி - ஒரு சின்ன Rewind!
தமிழ் திரையுலகில் ஜாம்பவான்களாக விளங்கி வந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மக்கள் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் தான் பிரபல நடிகை மஞ்சுளா. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு காலமானார்.
1970களில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகை மஞ்சுளா, 1976 ஆம் ஆண்டு பிரபல நடிகர் விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார். இவர் விஜயகுமாரன் இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது, விஜயகுமாரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கன்னு, அவருக்கு பிறந்தவர்கள் தான், கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய்.
அதேபோல மஞ்சுளாவிற்கும் விஜயகுமாருக்கும் பிறந்த குழந்தைகள் தான் வனிதா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் ப்ரிதா விஜயகுமார் ஆகிய மூன்று பெண்கள். இவர்கள் மூவருமே நடிகைகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஒரு கட்டத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதா வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் அவரது தாய் மஞ்சுளா விஜயகுமார் மரணப்படுக்கையில் இருந்து அவரை நேரில் சந்தித்து பேசி சமாதானம் அடைந்ததாக சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் பேசிய வனிதா விஜயகுமார் கூறியது குறிப்பித்தக்கது.
நமது சொத்தில் உனக்கும் பங்கு உண்டு, அவர்கள் உன்னை ஏமாற்றி விடுவார்கள், ஆகையால் நான் இருக்கும் பொழுதே அவற்றை கேட்டு பெற்றுக்கொள் என்று தன் தாய் கூறியதாகவும், உன்னை விட எனக்கு சொத்து பெரிதல்ல என்று தான் தனது தாய் மஞ்சுளாவிடம் கூறியதாகவும் வனிதா கூறியிருந்தார்.
அதேபோல தனது தாய் உயிருடன் இருந்த பொழுது அவருடைய ஆசைக்கு தலையை அசைத்த தனது தந்தை விஜயகுமார் அவர்கள், தாயின் மறைவுக்குப் பிறகு தன்னை மீண்டும் ஒதுக்கி விட்டதாகவும் அவர் அந்த பதிவில் கூறி இருந்ததார்.
31 ஆண்டுகளுக்கு பின் இணையும் இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் இசைஞானி இளையராஜா!
- actor vijayakumar
- biggboss vanitha
- cook with comali vanitha
- last respects to manjula vijayakumar
- manjula and vijayakumar
- manjula death video
- manjula vijayakumar
- manjula vijayakumar daughters
- manjula vijayakumar family
- manjula vijayakumar family photos
- manjula vijayakumar interview
- manjula vijayakumar passed away