இனியா முதல் கயல் வரை.. இளம் வயதில் கதையின் நாயகியாக கலக்கும் super cute ஹீரோயின்ஸ்!
திரைப்படங்களாக இருந்தாலும் சரி, சின்னத்திரை நாடகங்களாக இருந்தாலும் சரி, கடந்த சில வருடங்களாகவே ஆண்களை விட பெண்களை அதிக அளவில் முன்னிலைப்படுத்தி பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் எடுக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.
Alya Mansa
அந்த வகையில் சீரியல்களில், கதையின் நாயகியாக கலக்கும் பல இளம் மற்றும் நடுத்தர நடிகைகள் குறித்து இந்த பதிவில் காணலாம். இனியா நாடகத்தில், தைரியமான மற்றும் அழகான பெண்ணாக ஆலியா மான்சா லீடிங் ரோலில் நடித்து வருகின்றார். முன்பு கோவக்காரராக இருந்தாலும், இப்பொது நல்ல கணவனாக இருக்கும் விக்ரமை புரிந்து நடந்துகொள்ளும் மனைவியாகவும், விக்ரம் வீட்டில் வரும் பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்ளும் பெண்ணாகவும் அவர் நடித்து வருகின்றார்.
Sujithra Pandian Stores
தனது குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு கடையை நடத்தும் மருமகள் தனம், மற்றும் அவர் வாழ்க்கையைச் சுற்றி வரும் கதை தான் பாண்டியன் ஸ்ட்ரோஸ். உணர்ச்சிகரமான இந்த நாடகத்தில் சுஜிதா, ஸ்டாலின், குமரன் தங்கராஜன், வெங்கட் ரெங்கநாதன், ஹேமா, ராஜ்குமார், சரவண விக்ரம், வி.ஜே.தீபிகா, லட்சுமணபாண்டியன், ஷீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
Chaithra Reddy
கயல்.. தனது குடும்பத்தில் உழைக்கும் ஒரே ஒருகடின உழைப்பாளி அவர், அந்த பெண்ணின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது இந்த நாடகம். தன் தங்கையின் திருமணத்தை ஏற்பாடு செய்வது, அவள் வீழ்ச்சியை விரும்பும் மாமா, பணியிட தொல்லைகள் என பல தடைகளை அவள் வாழ்க்கையில் சந்தித்து நகர்கிறார்.
Kanika
எதிர்நீச்சல் ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினி, இவர்கள் நன்கு படித்தவர்கள், அதே நேரத்தில் அவர்களது கணவர்கள் அனைவரும் படிக்காதவர்கள். மனைவி என்பவள் வீட்டு வேலைகளை மட்டுமே செய்பவள் என்று நினைப்பவர்கள். குறிப்பாக ஆதி குணசேகரனை எதிர்த்து போராடி வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பும் இளம் நாயகிகளாக அவர்கள் வலம்வருகின்றனர்.
தயவு செஞ்சி ஹெல்ப் பண்ணுங்க..! காரில் அமர்ந்தபடி பாவனி காதலர் அமீர் வெளியிட்ட வீடியோ..!