முகேஷ் அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டை விட பெரிய மாளிகையில் வசிக்கும் பெண்.. இவரின் கணவர் யார் தெரியுமா?
முகேஷ் அம்பானியின் ஆடம்பர வீட்டை விட பெரிய மாளிகையான லக்ஷ்மி விலாஸில் கெய்க்வாட் அரச குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
உலகின் மிகப்பெரிய வீடான லக்ஷ்மி விலாஸ் அரண்மனை குஜராத்தில் அமைந்துள்ளது, இந்த அரண்மனை பரோடாவின் கெய்க்வாட்களுக்கு சொந்தமானது. லக்ஷ்மி விலாஸ் அரண்மனை, பிரிட்டனின் அரச குடும்பத்தின் வசிப்பிடமான பக்கிங்ஹாம் அரண்மனையை விட 4 மடங்கு பெரியது.
கெய்க்வாட்கள் ஒரு காலத்தில் பரோடா மாநிலத்தை ஆட்சி செய்தனர், அங்குள்ள உள்ளூர் மக்கள் அரச குடும்பத்தை இன்றும் உயர்வாக மதிக்கின்றனர். HRH சமர்ஜித்சிங் கெய்க்வாட், தற்போது பழைய அரச குடும்பத்திற்கு தலைமை தாங்குகிறார்.
லக்ஷ்மி விலாஸ் அரண்மனை 3,04,92,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பக்கிங்ஹாம் அரண்மனை 828,821 சதுர அடியில் பரவியுள்ளது. முகேஷ் அம்பானியின் ஆடம்பரமான மும்பை இல்லமான ஆன்டிலியா, 15,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின் மிக விலையுயர்ந்த வீடு, 48,780 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. எனவே லக்ஷ்மி விலாஸ் அரண்மனை உலகின் மிகப்பெரிய வீடாக கருதப்படுகிறது.
குஜராத்தில் உள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் 170 க்கும் மேற்பட்ட அறைகள் இருக்கிறதாம். 1890 ஆம் ஆண்டில் மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் III என்பவரால் கட்டப்பட்டது. இது கட்டப்பட்டபோது அரண்மனையின் விலை சுமார் 180,000 பிரிட்டிஷ் பவுண்ட் ஆகும். லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் கோல்ஃப் மைதானமும் உள்ளது.
இந்த அரண்மனை தற்போது மகாராஜா ரஞ்சித்சிங் கெய்க்வாட்டின் வாரிசான சமர்ஜித்சிங் கெய்க்வாட்டை மணந்த 44 வயதான ராதிகராஜே கெய்க்வாட்டின் இல்லமாக உள்ளது. ராதிகராஜே கெய்க்வாட் ஜூலை 19, 1978 இல் பிறந்தார். குஜராத்தின் வான்கனேர் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை டாக்டர் எம்.கே.ரஞ்சித்சிங் ஜாலா ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதற்காக அரச பட்டத்தை துறந்தார்.
வாசிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட ராதிகராஜே கெய்க்வாட் டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் இந்திய வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மகாராஜாவை திருமணம் செய்வதற்கு முன்பு, ராதிகராஜே கெய்க்வாட் முன்னணி பத்திரிகைகள் மற்றும் நாளிதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.