MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஹனிமூன் கொண்டாட காதலர்களின் கனவு தேசத்துக்கு சென்ற ராதா மகள் கார்த்திகா நாயர் - வைரலாகும் போட்டோஸ்

ஹனிமூன் கொண்டாட காதலர்களின் கனவு தேசத்துக்கு சென்ற ராதா மகள் கார்த்திகா நாயர் - வைரலாகும் போட்டோஸ்

நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் தனது காதல் கணவருடன் ஹனிமூன் கொண்டாட வெளிநாட்டுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்கள் வைரலாகின்றன.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 19 2023, 08:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
karthika nair

karthika nair

1980-களில் தமிழ் சினிமாவின் கனவு நாயகியாக வலம் வந்தவர் ராதா. சுமார் 10 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டிப்பறந்த ராதாவுக்கு கடந்த 1991-ம் ஆண்டு ராஜசேகர் என்பவருடன் திருமணம் ஆனது. திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு விலகிய ராதாவுக்கு கார்த்திகா நாயர், துளசி நாயர் என இரு மகள்கள் பிறந்தனர்.

26
Actress karthika nair

Actress karthika nair

அம்மாவைப்போல் சினிமாவில் முன்னணி ஹீரோயின் ஆக வேண்டும் என ராதாவின் மகள்கள் இருவருக்குமே ஆசை இருந்தது. அவர்கள் இருவருமே தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தனர். குறிப்பாக கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து அன்னக்கொடி, புறம்போக்கு போன்ற படங்களில் மட்டும் நடித்த கார்த்திகா அதன்பின்னர் சினிமாவை விட்டு விலகினார்.

36
Radha daughter karthika nair

Radha daughter karthika nair

அதேபோல் கார்த்திகாவின் சகோதரி துளசி நாயரும் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகானார். இதையடுத்து ஜீவாவுக்கு ஜோடியாக யான் திரைப்படத்தில் நடித்தார். அந்த இரண்டு திரைப்படங்களுமே படுதோல்வியை சந்தித்ததால் சினிமாவை விட்டு விலகி பிசினஸில் இறங்கிவிட்டார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

46
karthika nair photos

karthika nair photos

ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. ரோகித் மேனன் என்பவரை காதலித்து கரம்பிடித்தார் கார்த்திகா. கேரளாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

56
karthika nair in paris

karthika nair in paris

நடிகை ராதா தனது மகளுக்கு கிலோ கணக்கில் நகைபோட்டு திருமணம் செய்துகொடுத்ததோடு வரதட்சனையையும் கோடிக்கணக்கில் வாரி வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு ராதா மகள் கார்த்திகா நாயர் தன்னுடைய காதல் கணவர் உடன் ஹனிமூன் கொண்டாட சென்றுள்ளார்.

66
karthika nair honeymoon photos

karthika nair honeymoon photos

இருவரும் காதலர்களின் கனவு தேசமான பாரிசுக்கு ஜோடியாக சென்று அங்கு ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர். அங்குள்ள புகழ்பெற்ற ஈஃபிள் டவர் மற்றும் பல்வேறு பகுதிகளில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் கார்த்திகா. மேலும் அந்த அழகிய புகைப்படங்கள் அனைத்தும் தன் காதல் கணவர் ரோகித் மேனன் எடுத்தது எனவும் கார்த்திகா குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... ‘முதல் மரியாதை’ ரம்யா கிருஷ்ணன் நடிக்க வேண்டிய படமா..! பாரதிராஜா ஓகே சொல்லியும் மிஸ் ஆனது எப்படி?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved