MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ‘முதல் மரியாதை’ ரம்யா கிருஷ்ணன் நடிக்க வேண்டிய படமா..! பாரதிராஜா ஓகே சொல்லியும் மிஸ் ஆனது எப்படி?

‘முதல் மரியாதை’ ரம்யா கிருஷ்ணன் நடிக்க வேண்டிய படமா..! பாரதிராஜா ஓகே சொல்லியும் மிஸ் ஆனது எப்படி?

பாரதிராஜாவின் மாஸ்டர் பீஸ் படமான முதல் மரியாதை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகை ரம்யா கிருஷ்ணன் மிஸ் பண்ணியதை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 18 2023, 03:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ramya krishnan missed Muthal mariyathai movie chance

Ramya krishnan missed Muthal mariyathai movie chance

தமிழ் சினிமாவில் ஜாம்பவான் இயக்குனராக வலம் வந்தவர் பாரதிராஜா. சினிமாவுக்காக கிராமத்தில் இருந்து சென்னை நோக்கி ஓடியவர்களையெல்லாம் மீண்டும் கிராமத்துப்பக்கமே கொண்டு வந்து மண்வாசம் மிக்க படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனரகா திகழ்ந்து வந்தார் பாரதிராஜா. அவர் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும் அதில் ஒரு மாஸ்டர் பீஸ் திரைப்படம் தான் முதல் மரியாதை.

24
Radha, sivaji

Radha, sivaji

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1985-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் காலம் கடந்து கொண்டாடப்பட காரணம் அதன் கதைக்களமும், அதில் நடித்த நடிகர்களும் தான். சிவாஜி என்றாலே நடிப்பில் பிண்ணி பெடலெடுத்துவிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும், அப்படிப்பட்ட சிவாஜியையே வித்தியாசமாக காட்டி அப்ளாஸ் வாங்கினார் பாரதிராஜா. அதுமட்டுமின்றி இப்படத்தில் சிவாஜிக்கும் ராதாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியும் சூப்பராக இருந்தது.

34
ilayaraja bharathiraja

ilayaraja bharathiraja

நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இளையராஜாவின் இசை இப்படத்தை வேறு ஒரு உயரத்துக்கு கொண்டு சென்றது. அப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக ராசாவே உன்ன நம்பி, வெட்டிவேரு வாசம், பூங்காற்று திரும்புமா, அந்த நிலாவத்தான் போன்ற பாடல்கள் இளையராஜா ரசிகர்களின் பிளேலிஸ்டில் நீங்கா இடம்பிடித்த பாடல்களாகும், அந்த அளவுக்கு முதல் மரியாதை பட பாடல்கள் பேமஸ் ஆகின.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

44

இப்படத்தை பற்றிய மற்றுமொரு ஆச்சர்ய தகவலை தான் தற்போது பார்க்கப்போகிறோம். அதன்படி நடிகை ரம்யா கிருஷ்ணன் அறிமுகமாக இருந்தது முதல் மரியாதை படத்தில் தானாம். பாரதிராஜா, ஒரு கைதியின் டைரி படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோது வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார் ரம்யா கிருஷ்ணன். அவருக்கும் ரம்யா கிருஷ்ணனை பார்த்ததும் பிடித்துவிட்டதால் தன்னுடைய அடுத்த படத்தில் உன்னை அறிமுகப்படுத்துகிறேன் என சொல்லி அனுப்பினாராம்.

அதன்படி முதல் மரியாதை படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகளாக நடித்திருந்த ரஞ்சனியின் கதாபாத்திரத்தில் தான் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்க இருந்தாராம் பாரதிராஜா. ஆனால் இப்படம் தொடங்கும் முன்னரே ரம்யா கிருஷ்ணன் ஒய்ஜி மகேந்திரனின் வெள்ளை மனசு படத்தில் நடிக்க கமிட் ஆனதால் அவரை பாரதிராஜா முதல் மரியாதை படத்தில் நடிக்கவைக்கவில்லையாம். அதுமட்டும் நடந்திருந்தால் அந்த நிலாவைத்தான் நான் கையில் புடிச்சேன் பாடலுக்கு திரையில் தோன்றும் வாய்ப்பை பெற்றிருப்பார் ரம்யா கிருஷ்ணன். ஆனால் அது மிஸ் ஆகிவிட்டது.

இதையும் படியுங்கள்... ரஜினி, ஷாருக்கான் படங்களை ரிஜெக்ட் பண்ணிய பெப்சி உமா... பார்சலில் வந்த விரல்! பெப்சி உமாவை பதறவைத்த சம்பவம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாரதிராஜா
ரம்யா கிருஷ்ணன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved