"உள்ள தான் அத்தனை கேமரா இருக்கே.." எலிமினேட் செய்யப்பட்ட பிரதீப் - குமுறிய முன்னாள் போட்டியாளர் அமீர்!
Actor Amir About Pradeep : பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் இருந்து அண்மையில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட நடிகர் பிரதீப் ஆண்டனி அவர்களுக்கு தற்பொழுது ஆதரவு பெரிய அளவில் கிடைத்து வருகிறது.
vanitha vijayakumar BB
இந்நிலையில் அவருடைய இந்த எலிமினேஷன் குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் அமீர் மனம் திறந்துள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி நடிகர் பிரதீபுக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது, இதற்கு ஆதரவாக சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் மூலம் மூலம் புகழ்பெற்ற நடிகை வனிதா விஜயகுமார் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
"பிரதீப் அவருக்கு இருக்கும் பிரச்சனைக்காக சிகிச்சை பெற வேண்டும் என்றும், நான் கதவை திறந்து வைத்துக் கொண்டு சிறுநீர் கழிப்பேன் என்று கூறிய பிரதீப், பெண்கள் முன் நிர்வாணமாக நிற்க கூட தயங்க மாட்டார் என்று கூறி" அவரை வெளியேற்றுவது சரிதான் என்று கூறியிருந்தார்.