பாரம்பரிய ஆடையில் குடும்பத்தோடு கொண்டாட்டம்.. தீபாவளிக்கு ரெடியான நடிகை ஸ்ரேயா - சூப்பர் கிளிக்ஸ் இதோ!
Shriya Saran Deepavali Celebration : உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய திரை உலகிலேயே மிகச் சிறந்த நடிகையாக வளம் வருபவர் தான் ஸ்ரேயா சரண்.
Shriya
கடந்த 2001ம் ஆண்டு தெலுங்கில் வெளியான "இஷ்டம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த நடிகை ஸ்ரேயா சரண் கடந்த 2003ஆம் ஆண்டு தமிழில் வெளியான "எனக்கு 20 உனக்கு 18" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
எவ்வளவு வயசானாலும் அழகு மட்டும் குறையல.. வனிதாவின் அக்கா கவிதா விஜயகுமாரின் நியூ போட்டோஸ்..
Actress Shriya Saran
நடிகர் தனுஷ், விக்ரம், விஜய் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்து புகழ் பெற்ற ஸ்ரேயா, இறுதியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சிம்புவின் "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Shriya Saran Family
கடந்த 6 ஆண்டுகளாக தமிழ் மொழியில் நடிக்கவில்லை என்றாலும், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வருகின்றார் அவர்.
Shriya Saran Daughter
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு திருமணம் நடந்திருந்தாலும் இன்றளவும் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் ஸ்ரேயா. இந்நிலையில் தனது கணவர் ஆண்ட்ரி கோஷீவ் மற்றும் அவரது மகள் மற்றும் மாமியார் ஆகியோருடன் இணைந்து தீபாவளி திருநாளை கொண்டாடி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா.