என்னங்க சொல்றீங்க! பூண்டை வறுத்து சாப்பிட்டால் நீண்ட ஆயுளுடன் வாழலாமா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..
சமையலில் பூண்டைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் இரைப்பை முதல் பல சிறிய பிரச்சனைகளுக்கு பூண்டு ஒரு சிறந்த தீர்வாகும்.
பூண்டு பல அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்ட மசாலாப் பொருள்களில் ஒன்றாகும். குறிப்பாக இதை குளிர்காலத்தில் சாப்பிடுவது மிகவும் அவசியம். அதுவும் குறிப்பாக வறுத்த பூண்டு சாப்பிடுவது ரொம்ப நல்லது. அது ஏன் என்று தெரியுமா..?
பூண்டு வறுப்பது எப்படி?
பூண்டை வறுக்க, முதலில் பூண்டின் தோலை உறிக்கவும். பின் அதன் மீது சிறிது ஆலிவ் எண்ணெய் ஊற்றி, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும். குறைந்த தீயில் நன்கு வறுத்த பிறகு, ஒன்று முதல் இரண்டு பல் துண்டுகளைச் சாப்பிடலாம்.
வறுத்த பூண்டின் நன்மைகள்:
சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு நல்லது: குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க வறுத்த பூண்டு சாப்பிடுவது நல்லது. இவற்றை சாப்பிடுவதால் சளி, இருமல் மற்றும் காய்ச்சலை பாக்டீரியா மற்றும் வைரஸ்களை உடலில் தங்க அனுமதிப்பதில்லை.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது: உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கும் திறன் வறுத்த பூண்டில் உள்ளது. எனவே, தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.
இதையும் படிங்க: ஆண்களே! பூண்டு உங்களுக்கு வரப்பிரசாதம்..ஏன் தெரியுமா?
நீண்ட காலம் வாழலாம்: பூண்டு சாப்பிடுபவர்கள், நீண்ட காலம் வாழ்வதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. மேலும் இது அறிகுறிகளைக் குறைக்கும் சக்தியை கொண்டுள்ளது.
இதையும் படிங்க: பூண்டு தோல் இந்த பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கும்..ஆம் உண்மைதான்..!!
இரத்த அழுத்தம் அதிகரிக்காது: மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு உயர் இரத்த அழுத்தமே முக்கிய காரணம். பூண்டில் உள்ள கலவைகள் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D