MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இதெல்லாம் வேலைக்கு ஆகாது.. பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன், மருமகளை பிடிக்க அதிரடி முடிவு..!

இதெல்லாம் வேலைக்கு ஆகாது.. பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன், மருமகளை பிடிக்க அதிரடி முடிவு..!

வீட்டில் பணிபுரிந்த சிறுமியை கொடுமைப்படுத்திய புகாரில் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Jan 23 2024, 02:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
dmk mla karunanidhi

dmk mla karunanidhi

பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகின்றார். இவரது மனைவி மெர்லினா, தனது வீட்டில் பணிபுரிந்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த பட்டியலின பெண் ரேகாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

24
Scheduled Caste Girl

Scheduled Caste Girl

மேலும் ஆடைகளை களைந்து அடித்து துன்புறுத்தியதாகவும், சிகரெட்டால் சுட்டு சித்ரவதை செய்தாகவும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி கண்ணீர் மல்க பேசிய வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். 

இதையும் படிங்க;- திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் தலித் மாணவி சித்திரவதை.. ஒருத்தரையும் சும்மாவிடக்கூடாது.. கொந்தளிக்கும் ராமதாஸ்.!

34
Police Case

Police Case

வீட்டு வேலைக்காக சென்ற சிறுமியை தாக்கி கொடுமைப்படுத்தி கொடூரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில், எஸ்சி/எஸ்டி சட்டப்பிரிவுகள், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் ஆகியோர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.  

44
3 special forces

3 special forces

இந்நிலையில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மறறும் அவரது மனைவி மெர்லினாவையும் பிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க;-  கொடுமைப்படுத்தியதை சொல்லி கதறும் ரேகா! நெஞ்சை உலுக்குகிறது! ஆளுங்கட்சி எம்எல்ஏ மகனுக்கு எதிராக திமிரும் திருமா

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved