மரண பயத்தை காட்டிய குணா குகை... 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விசிட் அடித்த ஒரிஜினல் மஞ்சும்மல் பாய்ஸ்
கொடைக்கானலில் உள்ள குணா குகையில் சிக்கி பின்னர் மீட்கப்பட்ட ஒரிஜினல் மஞ்சும்மல் பாய்ஸ் 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அங்கு திடீர் விசிட் அடித்துள்ளனர்.
manjummel boys
உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அந்த வகையில் அண்மையில் வெளிவந்து சக்கைப் போடு போட்டு வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படமும் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது தான். மலையாளத்தில் அப்படம் எடுக்கப்பட்டாலும், அதற்கு தமிழ்நாட்டிலும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகின்றது.
Manjummel boys Movie
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற மலைப்பிரதேசமாக உள்ள கொடைக்கானல், சுற்றுலாத் தளமாகவும் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள பிக்னிக் ஸ்பாட்டுகளில் ஒன்று தான் குணா குகை. கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளிவந்த குணா திரைப்படம் எடுக்கப்பட்ட இடம் என்பதால் அதற்கு குணா குகை என பெயர் வந்தது. அதற்கு முன்னர் வரை அதை டெவில்ஸ் கிச்சன் என்று தான் அழைத்து வந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... ஹாய் மச்சான்ஸ்! உடல் எடையை குறைத்து பியூட்டி குயினாக... மீண்டும் ரியாலிட்டி ஷோவில் களமிறங்கிய நமீதா
manjummel boys visit guna cave
குணா குகையை பார்க்க ஏராளமான தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து போவதுண்டு. அந்த வகையில் கடந்த 2006-ம் ஆண்டு கேரளாவின் மஞ்சும்மல் பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தபோது, அங்குள்ள குணா குகைக்கு சென்றுள்ளனர். அப்போது அதில் ஒருவர் மட்டும் குணா குகையில் உள்ள குழியில் தவறி விழுந்து விடுகிறார். அவரை அவரது நண்பர்கள் ரிஸ்க் எடுத்து காப்பாற்றுகின்றனர்.
real and reel manjummel boys
அதை மையமாக வைத்து தான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் வருகைக்கு பின்னர் கொடைக்கானலில் உள்ள குணா குகையை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்று திடீரென ரியல் மஞ்சும்மல் பாய்ஸ் கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளனர்.
அச்சம்பவம் நடந்து 18 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரோடு மீண்டும் குணா குகைக்கு சென்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் அங்கு ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர்கள், கண்மணி அன்போடு காதலன் பாடலையும் பாடி மகிழ்ந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... தமிழக வெற்றிக் கழகத்தில் படுஜோராக நடக்கும் உறுப்பினர் சேர்க்கை.. 3 நாளில் இத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்களா?