MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தமிழக வெற்றிக் கழகத்தில் படுஜோராக நடக்கும் உறுப்பினர் சேர்க்கை.. 3 நாளில் இத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்களா?

தமிழக வெற்றிக் கழகத்தில் படுஜோராக நடக்கும் உறுப்பினர் சேர்க்கை.. 3 நாளில் இத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்களா?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்வதற்கான உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் செயலி மூலம் படு ஜோராக நடைபெற்று வருகின்றது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 10 2024, 03:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
TVK APP

TVK APP

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். அக்கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு, தான் கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்த உடன் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார். தற்போது கோட் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக தன்னுடைய கடைசி படமான தளபதி 69-ல் நடித்து முடித்துவிட்டு முழுநேரமாக அரசியலில் இறங்க உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Thalapathy Vijay

Thalapathy Vijay

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தான் தங்கள் கட்சியின் இலக்கு என்பதை திட்டவட்டமாக அறிவித்த விஜய், தன்னுடைய கட்சியை பலப்படுத்தும் பணிகளையும் படிப்படியாக செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை கடந்த மார்ச் 8-ந் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... ஹாய் மச்சான்ஸ்! உடல் எடையை குறைத்து பியூட்டி குயினாக... மீண்டும் ரியாலிட்டி ஷோவில் களமிறங்கிய நமீதா

34
TVK Membership APP

TVK Membership APP

செயலி மூலம் விஜய் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்த நடிகர் விஜய், அதில் தன்னை முதல் உறுப்பினராக சேர்த்துக் கொண்டு, பின்னர் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். விஜய் அறிமுகம் செய்துவைத்த அந்த செயலி மூலம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய ஒரே நேரத்தில் லட்சக் கணக்கிலான ரசிகர்கள் குவிந்ததால், சர்வர் கிராஷ் ஆனது.

44
Tamilaga Vettri Kazhagam Vijay

Tamilaga Vettri Kazhagam Vijay

இதையடுத்து அதனை சரிசெய்த பின்னர் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி மூன்று நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை அதில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்திருப்பதாக அக்கட்சியில் உறுப்பினர் சேர்க்கை துணைத் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். 2 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என விஜய் இலக்கு நிர்ணயித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கோவை ஈஷா மையத்தில் மஹாசிவராத்திரி.. கணவரோடு சென்று மெய்மறந்து தியானம் செய்த அமலா பால் - Latest Clicks!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
தமிழக வெற்றி கழகம்
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved