விலை ரொம்ப கம்மி.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ பயணிக்கலாம்.. எவ்வளவு தெரியுமா?
ஒடிஸியின் e2Go கிராபெனின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணிக்கலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Best Mileage E-Scooter
Odyssey Electric Vehicles ஆனது e2Go எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் Graphene மாறுபாட்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.63,650 ஆகும். இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.
Odysse E2GO Electric Scooter
ஒடிஸியின் e2Go கிராபெனின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர்கள் வரை பயணிக்கும். பயனர்கள் உரிமம் மற்றும் பதிவு இல்லாமல் இயக்கும் வசதியைப் பெறுவார்கள்.
Electric Scooter
ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எல்லோருடைய பட்ஜெட்டிலும் எளிதில் பொருந்தக்கூடியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
Odysse Electric Vehicles
இந்த ஸ்கூட்டர்கள் ஒவ்வொரு ரைடர் ஸ்டைலுக்கும் பொருந்தும் வகையில் கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கும். இதில் மேட் பிளாக், காம்பாட் ரெட், ஸ்கார்லெட் ரெட், டீல் கிரீன், அஸூர் ப்ளூ மற்றும் காம்பாட் ப்ளூ ஆகியவை அடங்கும்.
Electric Vehicles
e2GO ஸ்கூட்டருக்காக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கிராபெனின் பேட்டரி நம்பகமான மற்றும் வசதியான சவாரி அனுபவத்தை உறுதி செய்கிறது. இந்த பேட்டரி 8 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.
E2GO Graphene Variant
யூ.எஸ்.பி சார்ஜிங், ஆண்டி தெஃப்ட் லாக், கீலெஸ் என்ட்ரி டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் போன்ற அம்சங்கள் இதை சிறந்த வாகனமாக மாற்றுகிறது. ஒவ்வொரு வாகனத்திற்கும் மூன்று வருட வாரண்டியை வழங்குகிறது.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..