MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • எழில் எனக்கு புருஷன் மாதிரி.. எல்லாரையும் பதற வைத்த மனோகரி, நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

எழில் எனக்கு புருஷன் மாதிரி.. எல்லாரையும் பதற வைத்த மனோகரி, நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் ஜோசியர் இந்த வீட்டில் நல்லது நடக்க பூஜை ஒன்றை செய்ய வேண்டும் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

2 Min read
manimegalai a
Published : Jun 17 2024, 05:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அதாவது, பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்க அஞ்சலி இன்னைக்கு எப்படியாவது ஸ்கூல் கட் அடிக்கணும் என்று திட்டம் போட்டு சுடர் ரூமுக்குள் வந்து ஒளிய, இதை சுடர் பார்த்து விட அஞ்சலி சுடர் தாலி வைத்திருக்கும் பேக்கை எடுத்து கொண்டு ஓடி போய் எழில் ரூமில் ஒளிந்து கொள்கிறாள். 

25

சுடர் எழில் ரூமுக்குள் போக முடியாமல் வெளியே நின்றபடி, அஞ்சலி வெளியே வா ஸ்கூல் போகணும் என்று சொல்லி கூப்பிட்டு கொண்டிருக்க எழில் வர அஞ்சலி கையில் இருக்கும் தாலியை துணிக்குள் மறைத்து விடுகிறாள். பிறகு எழில் அஞ்சலியை ஒழுங்கா ஸ்கூலுக்கு போகணும் என்று அனுப்பி வைக்கிறாள். 

ஐஸ்வர்யா - உமாபதி வரவேற்பு! மகளுடன் வந்த ஷாலினி... சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் பங்கேற்பு!

35

இதை தொடர்ந்து பூஜைக்காக தயாராகும் எழில் வேட்டை சட்டை அணிந்து தோளில் துண்டு போட்டு கொண்டு தயாராக அஞ்சலி மறைத்து வைத்த தாலி அந்த துண்டுக்குள் மாட்டி கொண்டு தொங்க எழில் இதை கவனிக்காமல் இருக்கிறாள்.  பிறகு எழில் வந்து பூஜையில் உட்கார அய்யர் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் சேர்ந்து தான் இந்த பூஜையை செய்யணும் என்று சொல்ல, எழிலும் கனகவல்லியும் அதிர்ச்சி அடைகின்றனர். கனகவல்லி எழில் மட்டும் தனியாக பண்ண கூடாதா என்று கேட்க ஜோடியா உட்கார்ந்து பண்ணுறது தான் முறை என்று ஐயர் சொல்கிறார். 

45

இதையடுத்து மனோகரி நான் எழில் பக்கத்துல உட்க்காருறேன், அவர் எனக்கு புருஷன் மாதிரி தான் என்று சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். கனகவல்லி நீ என்னமா பேசுற என்று கேட்க ஆமாம் மா எழிலும் நானும் சின்ன வயசுல இருந்தே ப்ரண்ட்.. அவன் மனைவிக்கு பதிலா நான் உட்காரதுல என்ன தப்பு இருக்கு என்று கேட்டு பக்கத்தில் உட்கார போக வெளியில் இருந்து ஆவியாக பார்க்கும் இந்து அதிர்ச்சி அடைய எழில் எழுந்து விட மனோகரி அதிர்ச்சி அடைகிறாள். 

Sneha Son Workout: ஒர்க்கவுட்டில் சினேகாவுக்கே டஃப் கொடுக்கும் அவரின் மகன் விஹான்! வைரலாகும் புகைப்படம்!

55

என் மனைவியோட இடத்தை யாருக்கும் தர மாட்டேன் என்று சொல்லி மேலே சென்று இந்துவின் போட்டோவை கொண்டு வர இதை பார்த்த இந்து இன்னும் நான் உங்க மனசுல வாழ்ந்திட்டு தான் இருக்கேனா என்று சந்தோசப்படுகிறாள். பிறகு எழில் பூஜையில் இந்து போட்டோவை வைத்து பக்கத்தில் உட்கார்ந்து பூஜையை செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved