Nayanthara: இது நான் நேசித்த ஒரு கனவு! 'Femi9' நாப்கின் பிஸ்னஸ் துவங்கியது பற்றி.. நயன்தாரா வெளியிட்ட அறிக்கை!
நடிகை நயன்தாரா நேற்று விஜயதசமியை முன்னிட்டு Femi9 எனப்படும், நாப்கின் நிறுவனம் ஒன்றை தொடங்குவதாக அறிவித்தார். இதற்க்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், தற்போது இந்த பிஸ்னஸ் குறித்து... நெகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Femi 9
இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, "விஜயதசமியின் இந்த மங்களகரமான நாளில், நான் இன்று ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளேன். சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருக்கிறேன். இத்தனை வருடங்களில் இன்று மிகவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடன் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவளாகவும் இருக்கிறேன். பல ஆண்டுகளாக நான் திரைப்படங்களின் ஒரு பகுதியாக இருந்தேன், பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்திருக்கிறேன். சினிமா வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதையும் கவனிக்கிறேன். இந்த மகிழ்ச்சி அனைத்தும் இன்று ஒருங்கிணைந்துள்ளது.
Nayanthara
பெண்களின் நல்வாழ்வுக்காக பலகட்ட யோசனையில் இருந்து உருவான திட்டமான 'Femi9'ஐ உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இது வெறும் பிசினஸ் மட்டுமல்ல. இது நான் நேசித்த ஒரு கனவு! அது திரைகளுக்கு அப்பால் சென்று பெண்கள் ஒவ்வொருவருடனும் தனிப்பட்ட முறையில் கனெக்ட் ஆகும்.
Nayanthara about femi 9
'Femi9' ஒரு பிராண்ட் மட்டுமல்ல. இது பெண்களின் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் பிரதிநிதித்துவம். தனிப்பட்ட சுகாதார உலகில், இது பெண்களால், பெண்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த பயணத்தின் ஒவ்வொரு பகுதியும் அதாவது ஆரம்பம் முதல் இப்போது வரை அதில் ஒரு பகுதியாக இருக்கும் பெண்களால் மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடனும் உருவாக்கப்பட்டது.
Nayanthara thanking for some persons
தனிப்பட்ட வெற்றியை அடிக்கடி முன்னிலைப்படுத்தும் ஒரு துறையில், 'Femi9' என்பது ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, நம்பிக்கையின் கொண்டாட்டமாகும். தனிப்பட்ட சுகாதாரத்தில் இந்த முயற்சியை எடுக்க என்னைத் தூண்டியவர்களுக்கும் கொடுத்த ஆதரவிற்கும் நான் நன்றி கூறுகிறேன்.
femi 9 pride for all women
என் வாழ்க்கையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் நன்றி. 'Femi9' என்பது நமது கூட்டு சாதனையாகும். நாம் ஒற்றுமையுடன் இருந்து ஒருவரையொருவர் உயர்த்தும்போது அனைவருக்கும் அது நன்மை கொடுக்கிறது.
nayanthara statement:
'Femi9' ஒரு புராடக்ட், அது வாங்குபவர்களின் வீடுகளுக்குச் செல்கிறது என்பதையும் தாண்டி உலகெங்கிலும் உள்ள பெண்களின் இதயங்களைச் சென்றடையும் ஒரு பிராண்ட். இது அதிகாரமளிக்கும் ஆதாரமாகவும், ஆறுதலாகவும், ஒன்றாக இணைந்து, நாம் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்பதை நினைவூட்டுவதாகவும் இருக்கட்டும். அன்புடனும் நன்றியுடனும், நயன்தாரா என தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D