தைரோகேர் நிறுவனத்துடன் புது பிஸ்னசுக்கு அடி போடுகிறாரா நயன்தாரா? வேலுமணியுடன் நடந்த திடீர் சந்திப்பு!
நடிகை நயன்தாரா, தைரோகேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் வேலுமணி ஆரோக்கியசாமியை குடும்பத்துடன் சென்று சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Nayanthara and vignesh shivan:
நடிகை நயன்தாரா... விக்னேஷ் சிவனை காதலித்து கொண்டிருக்கும் போதே, நடிப்பை தாண்டி திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டார். மேலும் பல்வேறு தொழில்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
Nayanthara Business:
அந்த வகையில், லிப் பாம், ஸ்கின் கேர் புரோடெக்ட், சானிட்டரி நாப்கின், என இவர் நிர்வகித்து வரும் தொழில்களில் லிஸ்ட் நீண்டு கொண்டே இருக்கிறது. எத்தனை தொழிலில் இன்வெர்ஸ் செய்திருந்தாலும், நடிப்பில் பிசியாக இருந்தாலும் குடும்பம் மற்றும் குழந்தைகள் விஷயத்தில் கண்ணும் கருத்துமாக உள்ளார்.
சீரியல் ஹீரோயினாக மாறும் அனிதா சம்பத்! ஹீரோ இவரா? யாருன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க!
Hibiscus Tea controversy:
நடிகை நயன்தாரா கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் செம்பருத்தி டீ குறித்து... தன்னுடைய சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே நடிகை சமந்தா தவறான மருத்துவ குறிப்பு கூறியதாக அவரை ஜெயிலில் போட சொன்ன மருத்துவர் பிலிப்ஸ், நயன்தாரா சாதாரணமாக போட்ட பதிவுக்கும், ஒரு நீண்ட விளக்கம் கொடுத்திருந்தார்.
Nayanthara instagram Post
குறிப்பாக செம்பருத்தி டீ உடல் நலனுக்கு நல்லது என்பதோடு மட்டும் நிறுத்தி கொள்ளுங்கள். அது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்றும் கொழுப்பை குறைக்கும் என கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதை கூற நீங்கள் மருத்துவரும் இல்லை என தெரிவித்தார்.
பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன! வயநாடு மற்றும் வால்பாறை நிலச்சரிவு குறித்து கமல் ஆதங்கம்!
Nayanthara Meet Thyrocare founder:
நயன்தாரா சமந்தாவை போல், பிலிப்ஸின் பதிவுக்கு ஏதாவது பதில் கொடுப்பாரா? என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், நயன்தாரா அதை துளியும் கண்டுகொள்ள வில்லை. இந்நிலையில், நயன்தாரா தைரோகேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் வேலுமணி ஆரோக்கியசாமியை குடும்பத்துடன் சென்று சந்தித்துள்ளார். எனவே ரசிகர்கள் பலர், நயன்தாரா தைரோகேர் நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழிலில் இருங்குகிறாரா? என சந்தேகங்களை எழுப்பு வருகிறார்கள். கூடிய விரைவில் நயன்தாரா இதுகுறித்து தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.