ஹோம்லி லுக்கில் கொஞ்சும் அழகு.. மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா - கூல் போட்டோஸ் இதோ!
Actress Rashmika Mandanna Photos : இளம் வயதில் இந்தியாவின் நேஷனல் க்ரஷ் என்ற நிலைக்கு மாறியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் இப்பொது இந்திய மொழிகள் பலவற்றுள் பிசியான நாயகியாக வளம்வருகின்றார்.
Actress Rashmika
கர்நாடகாவில் பிறந்து இப்பொழுது இந்திய மொழிகள் பலவற்றில் சிறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார் ராஸ்மிகா மந்தானா. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் களமிறங்கிய நிலையில், தொடர்ச்சியாக கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
Rashmika Mandanna
இந்த சூழ்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற சுல்தான் திரைப்படத்தின் மூலம் ராஷ்மிகா தமிழ் திரை உலகில் கால் பதித்தார். அதன் பிறகு தமிழில் அவர் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடித்த "வாரிசு" திரைப்படம் அவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
Rashmika Mandanna
தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தானா இந்த 2024 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் அல்லு அர்ஜுனன் புஷ்பா 2 திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளது அனைவரும் அறிந்ததே. மேலும் இரு தெலுங்கு திரைப்படங்களிலும், ஒரு ஹிந்தி படத்திலும் அவர் நடிக்கின்றார்.