மகன் ப்ரீ வெட்டிங்கில் ரொமாண்டிக் போஸ் கொடுக்கும் முகேஷ் - நீதா அம்பானி.. லேட்டஸ்ட் போட்டோஸ்..
ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தியாவின் செல்வாக்கு மிக்க மற்றும் வசதியான குடும்பங்களில் தொழிலதிபர் அம்பானியின் குடும்பமும் ஒன்றாகும். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், பெட்ரோ கெமிக்கல்ஸ், தொலைத்தொடர்பு, சில்லறை வணிகம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு துறைகளில் பரவியுள்ளது.
nita ambani
முகேஷ் அம்பானி நீதா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானி ஸ்லோகே மேத்தா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இஷா அம்பானி ஆனந்த் பிராமல் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
மார்ச் 1 முதல் 3 வரை பல நூறு கோடி செலவில் நடந்த இந்த கோலாகல நிகழ்ச்சியில் இந்திய திரைப்பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர். பல நூறு கோடி செலவில் நடந்த ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வு பேசு பொருளாக மாறியது.
இந்த நிகழ்வு முடிந்து 5 நாட்களாகியும் இதுதொடர்பான தகவல்கள் வெளியான வண்னம் உள்ளன. குறிப்பாக இந்த நிகழ்வில் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமே கலந்து கொண்டதால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என 3 நாட்களுமே களைகட்டியது.
அதிலும் ஆனந்த் - ராதிகாவின் சங்கீத் நிகழ்ச்சி தான் இதில் ஹைலைட் என்றே கூறலாம். பிரபல பாப் பாடகி ரிஹானாவின் நடனம், முகேஷ் - நீதா அம்பானியின் கலக்கல் நடனம், ஆனந்த் - ராதிகாவின் ரொமாண்டிக் டான்ஸ் ஆகியவை பார்ப்பவர்களை உற்சாகப்படுத்தியது.
இந்த உற்சாகத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாக பல பாலிவுட் பிரபலங்களும் மேடை ஏறி நடனமாடினர். இதற்காக அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் முகேஷ் அம்பானி இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
குறிப்பாக முகேஷ் அம்பானி - நீதா தம்பதி ரொமாண்டிக் போஸ் கொடுக்கும் போட்டோக்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.