ராமர் கோவில் திறப்பு நாளில்... பிரதமரை டார்கெட் செய்தாரா நடிகை பார்வதி? இன்ஸ்டா பதிவுக்கு MP கனிமொழி ஆதரவு!
ராமர் கோவில் பிரதிஷ்டை நாளில், 'தங்கலான்' பட நாயகி பார்வதி... அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அது தீயாக பரவி வருகிறது.
மலையாள நடிகையான பார்வதி, தமிழிலும் பூ, மரியான், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்கலான்' படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார். தன்னுடைய மனதில் படும் கருத்துக்களை வெளிப்படையாக பேசும் குணம் படைத்த பார்வதி, அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை நாளில்... அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரை பக்கத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் இவரின் இந்த பதிவைப்... எம்.பி.கனிமொழியும் லைக் செய்து, பகிர்ந்துள்ளது தான் ஹைலைட்.
அதாவது கடந்த 2019-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, ராமருக்கு கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2020 ஆண்டு பூமி பூஜை போடப்பட்ட நிலையில், கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வந்தனர். 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்குகளுடன் இந்த கோவில் தற்போது கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று ஜனவரி 22 குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டுள்ளது.
500 வருடங்களாக பல பக்தர்களின் ஏக்கமாக இருந்த ராமர் கோவில் திறப்பு விழா... இன்று நடந்துள்ளதால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, உள்ளிட்ட பல பிரபலங்கள் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதே போல் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, போன்ற விளையாட்டு வீர்கள்... கலந்து கொண்டுள்ளனர். சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி , 11 நாள் விரதம் இருந்து கலந்து கொண்டு, ராமர் பிரதிஷ்டைக்கு பின்னர் தீர்த்த பிரசாதம் குடித்து விரதத்தை முடித்தார். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.
Parvathy Thiruvothu
இந்நிலையில் பிரபல நடிகை பார்வதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அரசியல் அமைப்பு சட்டத்தின் முக உரையை பகிர்ந்துள்ளார். இதில் "நமது நாடு மதச்சார்பற்ற, சமூக, ஜனநாயகம் கொண்ட நாடு என்பதை குறிக்கிறது என்பது தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அரசின் ஜனநாயக தன்மையை வலியுறுத்தி, இந்திய மக்களுக்காகவே அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது என்று முன்னுரையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இறையாண்மை, சமூகம், மதச்சார்பற்ற ஜனநாயக, குடியரசு, நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தேச ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை குறிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதமர் இந்து கோவில்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை சுட்டிக்காட்டும் விதத்திலேயே பார்வதி இதனை பகிர்ந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
பார்வதி இதை பகிர்ந்தும், பலர் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம், நடிகை பார்வதியின் இந்த பதிவை... எம்.பி.கனிமொழி லைக் செய்துள்ளதோடு... ஷேர் செய்து தன்னுடைய ஆதரவையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.