தமிழகம்.. மொத்தம் 19 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யப்போகுது.. வானிலை ஆய்வு மையம் தந்த அப்டேட் - முழு விவரம்!
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் இங்கு மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ஏற்கனவே கடலோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழையை எதிர்பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Heavy Rain
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நவம்பர் 14ஆம் தேதி 4 மாவட்டங்களில் அதிக கனத்த மழையும், 15 மாவட்டங்களில் மிதமானது முதல், அதிக கனத்த மழை வரை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
Tamilnadu Rains
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது மேற்கும் மற்றும் வடமேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து மத்திய மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி நிலைகூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Rains
இதன் காரணமாக தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு அதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை பல இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை வரை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேபோல விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.