நடுவர்கள் டெக்னாலஜியை பயன்படுத்தி தவறு செய்கிறார்கள், அப்போ டெக்னாலஜியை ஸ்டாப் பண்ணுங்க: நவ்ஜோத் சிங் சித்து!
டெக்னாலஜியை பயன்படுத்திய போதிலும் கூட நடுவர்கள் தவறு செய்கிறார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து குற்றம் சாட்டியுள்ளார்.
Rajasthan Royals, Sanju Samson, IPL 2024
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில், நேற்று நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்திருக்க வேண்டியது. நடுவர்கள் கொடுத்த தவறான முடிவால் சஞ்சு சாம்சன் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்து வெளியேறவே கடைசியில் டெல்லி கேபிடல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Rajasthan Royals, Sanju Samson
இந்த நிலையின் இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, சஞ்சு சாம்சனுக்கு அவுட் கிடையாது. நடுவர்கள் தவறான முடிவு எடுத்துள்ளனர். கேட்ச் பிடிக்கும் போது பீல்டர் பவுண்டரி லைனை 2 முறை தொட்டுவிட்டார். ரெவியூவில் சில வினாடிகள் மட்டுமே பார்த்துவிட்டு மூன்றாவது நடுவர் முடிவை எடுத்துவிட்டார். பல கோணங்களில் பீல்டரின் கால் பவுண்டரி ரோப்பை தொட்டதா இல்லையா என்பதை தெளிவாக பார்த்திருக்க வேண்டும்.
Parth Jindal vs Sanju Samson
டெக்னாலஜியை பயன்படுத்தி தவறு செய்யும் போது, ஏன் டெக்னாலஜியை பயன்படுத்த வேண்டும். டெக்னாலஜியை பயன்படுத்துவதை ஸ்டாப் பண்ண வேண்டும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
IPL 2024, DC vs RR 56th Match
தற்போது வரையில் 11 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. எஞ்சிய 3 போட்டிகளில் முறையே சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.
Sanju Samson Out
வரும் 12 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 61ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.