MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கல்யாணம் முதல் தங்கலான் ரிலீஸ் வரை... ரசிகர்கள் அடுக்கிய கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த மாளவிகா மோகனன்

கல்யாணம் முதல் தங்கலான் ரிலீஸ் வரை... ரசிகர்கள் அடுக்கிய கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த மாளவிகா மோகனன்

தங்கலான் படத்தின் நாயகி மாளவிகா மோகனன், எக்ஸ் தளத்தில் ரசிகர்களுடன் உரையாடியபோது பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 29 2024, 03:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் நடிப்பில் தற்போது தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி உள்ளார். இப்படத்தில் சீயான் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைத்துவிட்டாலும், அதன் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் படக்குழு காலம் தாழ்த்தி வருகிறது.

27

இந்த நிலையில், இன்று எக்ஸ் தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகை மாளவிகா மோகனன், அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்தார். அதிலும் குறிப்பாக தங்கலான் படம் பற்றிய கேள்விகள் அதிகளவில் இருந்தன. அதன்படி தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய கேள்விக்கு, அது மில்லியன் டாலர் கொஸ்டின் என பதிலளித்த மாளவிகா, தனக்கும் ரிலீஸ் பற்றி தெரியாது என வெளிப்படையாக கூறினார்.

இதையும் படியுங்கள்... Dhivya Duraisamy : இப்போ பிளாக் ட்ரெண்டிங் போல.. தாராள கவர்ச்சியில் நடிகை திவ்யா துரைசாமி - Latest Photos!

37

அதேபோல் தங்கலான் படத்தில் டப்பிங் பேசி இருக்கிறீர்களா என்கிற கேள்விக்கு ஆம் என பதிலளித்த மாளவிகா, அதை ஆடியன்ஸ் எவ்வாறு ஏற்றுக்கொள்ள உள்ளார்கள் என்பதை பார்ப்பதற்கு ஆர்வமுடன் இருப்பதாக கூறி உள்ளார். 

47

உங்களின் செலிபிரிட்டி கிரஷ் யார் என்கிற கேள்விக்கு பதிலளித்த மாளவிகா, கஹோ நா பியார் ஹெ படம் வந்தபோது ஹிருத்திக் ரோஷன் மீது அதிகளவு கிரஷ் இருந்தது என கூறினார்.

57

எப்போதும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவது ஏன் என்கிற கேள்விக்கு, தனக்கு கவர்ச்சி மிகவும் பிடிக்கும் என கூலாக பதிலளித்து உள்ளார் மாளவிகா மோகனன்.

67

அதேபோல் ரசிகர் ஒருவர் எப்போ கல்யாணம் என கேட்ட கேள்விக்கு, எனக்கு கல்யாணம் ஆவதை பார்ப்பதற்கு ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள் என கேட்டிருக்கிறார் மாளவிகா மோகனன்.

77

ரஜினி உடன் பேட்ட படத்தில் நடித்த அனுபவம் பற்றிய கேள்விக்கு, தலைவர் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் இனிமையானவர், அன்பானவர், மிகவும் ஊக்கமளிப்பார் என கூறி இருக்கிறார் மாளவிகா.

இதையும் படியுங்கள்... Samantha: கேக் முன்பு கண்களை மூடி அமர்ந்திருக்கும் அழகு சிலை.! சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved