மக்கள் செல்வன்.. மெல்லிய மீசையில் டக்கர் ஸ்டைல்.. எந்த படத்திற்காக இந்த லுக் தெரியுமா? ஒரு சுவாரசிய அப்டேட்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள், நேற்று பிரபல இயக்குனர் அமீர் அவர்களுடைய இரண்டாவது உணவகமான Law Cafeவை மயிலாப்பூரில் திறந்து வைத்து வாழ்த்தினார். இதில் நடிகர் நடிகைகள் சிலரும் கலந்துகொண்டனர்.
Ameer
சினிமா மீது கொண்ட ஆசையினால் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, இன்று மக்கள் செல்வன் என்கின்ற ஒரு மிகச்சிறந்த பட்டத்தோடு வலம் வரும் நடிகர் தான் விஜய் சேதுபதி. எந்த விதமான கதாபாத்திரம் வேண்டுமானாலும் இவரால் ஏற்று நடிக்க முடியும் என்பதை நிரூபித்த ஒரு சிறந்த நடிகர் இவர்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்ற சிறப்பான நடிகர்களுக்கு வில்லன் நடிகராக நடித்து இன்று புகழின் உச்சியில் இருந்து வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
Mysskin
இந்நிலையில் நேற்று சென்னை மயிலாப்பூரில் நடந்த ஒரு உணவக திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய விஜய் சேதுபதி, தனது புதிய திரைப்படத்திற்கான கெட்டப்பில் அங்கு வந்திருந்தார். மெல்லிய மீசையோடு பெரிய கண்ணாடி அணிந்து வந்த மக்கள் செல்வனை பார்த்த பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Jeyaram
இந்நிலையில் பிரபல இயக்குனர் மிஷ்கின் அவர்களுடைய இயக்கத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக நடிக்க உள்ள படத்திற்கான கெட்டப் தான் அது என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. பிரபல தயாரிப்பாளர் தானு தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகவுள்ள நிலையில், பிரபல நடிகர் ஜெயராம் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.