நிறம் மாறும் தோல்... அடக்கடவுளே ‘மகாராஜா’ பட நடிகை மம்தா மோகன்தாஸுக்கு இப்படி ஒரு அரியவகை நோய் பாதிப்பா?
மகாராஜா படத்தில் நடித்த நடிகை மம்தா மோகன்தாஸ், தனக்கு விட்டிலிகோ எனும் அரியவகை நோய் பாதிப்பு இறுப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
Mamta mohandas
மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் மம்தா மோகன்தாஸ். இவர் நடிப்பது மட்டுமின்றி பாட்டு பாடுவது, படங்கள் தயாரிப்பது என பன்முகத்திறமை கொண்டவராக விளங்குகிறார். மேலும் இவர், கர்நாடக் இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசையை முறையாக கற்றுக் கொண்டுள்ளார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் மம்தா.
Actress mamta mohandas
இதையடுத்து பெரியளவில் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாத இவர், கடந்த 2011-ம் ஆண்டு பஹ்ரைனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் மம்தா. விவாகரத்துக்கு பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த மம்தா, மலையாளத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவந்தார்.
Maharaja movie actress Mamta mohandas
தமிழிலும் அவ்வப்போது தலைகாட்டும் மம்தா, விஷால் நடிப்பில் வெளியான எனிமி படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் சமீபத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜாவிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் மம்தா. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர், அதில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பதிவிட்டுள்ள புகைப்படம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... கட்டுனா இவள கட்டனும் டா பாடலுக்கு மனைவி மற்றும் மகளுடன் குத்தாட்டம் போட்ட அர்ஜுன்!
mamta mohandas diagnosed with vitiligo
அந்த புகைப்படத்தில் கையில் தோல் நிறம் மாறி சில இடங்களில் சாக்லேட் நிறத்திலும் சில இடங்களில் வெள்ளை நிறத்திலும் இருக்கிறது. இதற்கு காரணம் விட்டிலிகோ என்கிற அரியவகை நோய் பாதிப்பு தான். மம்தாவுக்கு அந்த நோய் பாதிப்பு இருப்பது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. அந்த நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் விட்டிலிகோ தினம் கொண்டாடப்படுகிறது.
Mamta mohandas insta post
அந்த தினத்தை ஒட்டி தான் மம்தா அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். உடலில் உள்ள நிறமி செல்கள் இறந்தாலோ அல்லது அதனுடைய செயல்பாடுகள் தடைபட்டாலோ இந்த விட்டிலிகோ என்கிற நோய் வருமாம். இது பரவக்கூடியது இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறித்தால் கட்டுப்படுத்த முடியுமாம். நடிகை மம்தாவுக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா மாதிரி விஜய் - திரிஷா... லிப்ட்ல கமுக்கமா செஞ்ச வேலை - தோலுரிக்கும் பாடகி சுசித்ரா