ஸ்டைலிஷ் ஆக்டர் முதல்.. தாதாசாகேப் பால்கே வரை.. 48 வருட திரை வாழ்கை - ரஜினிகாந்த் பெற்ற விருதுகள் ஒரு பார்வை!
Super Star Rajinikanth : "இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா".. அனுபவித்து தான் எழுதியுள்ளார் வைரமுத்து என்றே கூறலாம். அந்த அளவிற்கு கடந்த 48 ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கி வருகின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
Apoorva ragangal
கடந்த 1975ம் ஆண்டு இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்களுடைய இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" திரைப்படத்தின் மூலம் கலை உலகில் தனது திரைப்பயணத்தை துவங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், கடந்த 48 ஆண்டுகள் இந்த திரைத்துறையில் பயணம் செய்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இந்த பதிவில் இதுவரை அவர் பெற்றுள்ள சில சிறந்த விருதுகள் குறித்து பார்க்கலாம்.
Rajinikanth
இந்திய அரசு வழங்கும் உயரிய விருதுகளான பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை முறையே 2000 மற்றும் 2016 ஆம் ஆண்டு பெற்றார் ரஜினிகாந்த் அவர்கள். மேலும் திரைத்துறையினருக்கு என்று வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தாதாசாகிப் பால்கே விருதை கடந்த 2021 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1984 ஆம் ஆண்டு தமிழக அரசு வழங்கும் மாநில விருதுகளின் அடிப்படையில் கலை உலகிற்கு சிறந்த முறையில் பணியாற்றியதற்காக அவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா அரசும் இவருக்கு 2012 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி விருது வழங்கி சிறப்பித்தது.
Kollywood Super star
இந்திய அளவில் மட்டுமல்லாமல், பன்னாட்டு அளவிலான விருதுகளையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குவித்துள்ளார் அதிலும் குறிப்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆப் இந்தியா நிறுவனம் இவருக்கு "இந்தியன் ஃபிலிம் பெர்சனாலிட்டி ஆஃப் தி இயர்" விருது வழங்கியது. அதேபோல IFFI Golden Jubilee ICON விருதும் 2019 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
பிரபல தனியார் நிறுவனம் ஒன்று வழங்கும் "Indian Entertainer of the Year", "Entertainer of the Decade", "Stylish Actor", "The 25 Greatest Global Living Legend" உள்ளிட்ட பல்வேறு சிறப்பு விருதுகளையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Jailer Movie
சினிமா எக்ஸ்பிரஸ் அவார்டுகளை ஏழு முறை வென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவர்கள் ஃபிலிம் ஃபேன்ஸ் அசோசியேஷன் வழங்கும் விருதுகளை 1979 ஆம் ஆண்டு முறை 1995 ஆம் ஆண்டு வரை சுமார் எட்டு முறை வெற்றி பெற்றுள்ளார். மேலும் முள்ளும் மலரும் படம் துவங்கி 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படம் வரை தமிழக அரசு வழங்கும் மாநில விருதுகளையும் இவர் இதுவரை 7 முறை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 48 வருடத் திரை வாழ்க்கையில் பல்வேறு விருதுகளை குவித்துள்ளபொழுதும் இன்றளவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தேசிய விருது பெறாதது ஒரு மிகப்பெரிய வருத்தமாகவே அவர் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
தனக்கு முந்தைய தலைமுறையை நடிகர்களுடன் திரையில் போட்டியிட்டு, பின் தன் சமகாலத்து நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் போட்டியிட்டு, இன்று தன் ரசிகர்களாக இருந்து இன்று திரைத்துறையில் மிக மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ள தளபதி விஜய் மற்றும் தல அஜித் போன்ற நடிகர்களின் படங்களோடு போட்டியிட்டு வரும் ஒரு மாபெரும் கலைஞனாக திகழ்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் இந்த சிவாஜிராவ் கேக்வாட்.