MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கோலிவுட்டின் பணக்கார ஜோடி இவங்க தான்... சூர்யா - ஜோதிகாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

கோலிவுட்டின் பணக்கார ஜோடி இவங்க தான்... சூர்யா - ஜோதிகாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

கோலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் சூர்யா - ஜோதிகா இருவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 13 2024, 12:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
suriya jyothika

suriya jyothika

கோலிவுட்டில் கொண்டாடப்படும் ஜோடி என்றால் அது சூர்யா - ஜோதிகா தான். சினிமாவில் மட்டுமல்லாமல் ரியல் லைஃபிலும் குறையாத காதலுடன் வாழ்ந்து வரும் இந்த ஜோடி தான் காதலிப்பவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகவும் இருந்து வருகிறார். வாழ்ந்தா சூர்யா - ஜோதிகா மாதிரி வாழனும் என்று சொல்லும் அளவுக்கு ரியல் லைஃபிலும் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது இந்த ஜோடி. இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி, பேரழகன் போன்ற படங்களில் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Suriya wife Jyothika

Suriya wife Jyothika

குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு ஜோதிகாவை கரம்பிடித்தார் சூர்யா. இந்த ஜோடிக்கு தியா, தேவ் என இரு பிள்ளைகளும் உள்ளனர். சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவை விட்டு விலகினார் ஜோதிகா. சுமார் 7 ஆண்டுகள் நடிப்புக்கு முழுக்கு போட்ட அவர், பின்னர் 36 வயதினிலே படம் மூலம் கோலிவுட்டில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். இனி ஹீரோவுடன் டூயட் பாடும் ரோல்களில் நடிக்க கூடாது என முடிவெடுத்த ஜோதிகா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறார்.

36
Suriya Net Worth

Suriya Net Worth

மறுபுறம் சூர்யாவும் மாஸ் மற்றும் கிளாஸ் ஆன படங்களை தேர்வு செய்து நடிக்கிறார். இவர் ஐந்து நிமிட கேமியோ ரோலில் நடித்தாலே தியேட்டரில் விசில் சத்தம் பறக்கும் அளவுக்கு சூர்யாவின் மார்க்கெட்டும் பன்மடங்கு அதிகரித்து உள்ளது. தற்போது கங்குவா என்கிற பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சூர்யா ரூ.30 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.

இதையும் படியுங்கள்... ஸ்வீட்டி அனுஷ்கா முதல் டயானா நயன்தாரா வரை.. சினிமாவுக்காக பெயரை மாற்றிய நடிகைகளும்... அவர்களின் நிஜ பெயர்களும்

46
Jyothika Net Worth

Jyothika Net Worth

அதேபோல் அவரின் மனைவி ஜோதிகாவும் பிற மொழிகளில் மாஸ் காட்டி வருகிறார். கடந்தாண்டு மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடித்த காதல் தி கோர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து இந்தியில் கடந்த வாரம் மாதவன், அஜய் தேவ்கன் உடன் இணைந்து நடிகை ஜோதிகா நடித்திருந்த சைத்தான் என்கிற திரில்லர் படம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. நடிகை ஜோதிகாவும் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

56
suriya jyothika salary

suriya jyothika salary

சினிமாவில் மட்டுமல்லாமல் பிசினஸிலும் ஜோடியாக சாதித்து வருகிறது இந்த ஜோடி. இவர்கள் இருவரும் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அந்நிறுவனம் மூலம் ராட்சஸி, சூரரைப் போற்று, ஜெய் பீம், கடைக்குட்டி சிங்கம், விருமன் என தொடர்ந்து தரமான வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்கள். இதுதவிர இவர்கள் தயாரிப்பில் தற்போது இந்தியில் ஒரு படமும் தயாராகி வருகிறது.

66
suriya jyothika Combined Net Worth

suriya jyothika Combined Net Worth

சினிமா, பிசினஸ் இரண்டிலும் கொடிகட்டிப் பறந்து வரும் இந்த ஜோடியின் சொத்து மதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் சூர்யாவை விட ஜோதிகாவின் சொத்து மதிப்பு தான் அதிகம். சூர்யாவின் சொத்து மதிப்பு வெறும் ரூ.206 கோடி தான். ஆனால் ஜோதிகாவின் சொத்து மதிப்பு ரூ.331 கோடியாம். இவர்கள் இருவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.537 கோடியாம். கோலிவுட்டின் பணக்கார ஜோடியும் இவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அடுத்த தளபதி இவர்தான் போலையே... விஜய் பாணியில் ரசிகர் படையை திரட்டி மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் - வீடியோ இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved