வாய் பேசும் தாமரையே.. ரசிகர்களை கவிதை பாட வைத்த நாயகி - ஹாட் லுக்கில் சொக்கவைக்கும் ஷிவானி!
Shivani Narayanan Photos : விருதுநகரில் பிறந்து தனது 21 வது வயதில் தமிழ் திரை உலகில் கால் பதித்த நடிகை தான் ஷிவானி நாராயணன். இவர் அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் வெளியிடும் ஹாட்டான போட்டோஸ்கள் பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
Actress Shivani Narayanan
கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சின்னத்திரை நாடகமான "பகல் நிலவு" மூலம் தனது கலை உலக பிரவேசத்தை துவங்கினார் ஷிவானி நாராயணன். அதன் பிறகு தொடர்ச்சியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் பல சின்னத்திரை நாடகங்களில் இவர் நடித்து வந்தார்.
Shivani Narayanan
மேலும் கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் இவர் போட்டியாளராக பங்கேற்று 98வது நாள் வெளியேறியது அனைவரும் அறிந்ததே. முதல் முதலில் இவர் லோகேஷ் கனகராஜின் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக தோன்றி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Shivani
அதன் பிறகு "வீட்டில விசேஷங்க", "டிஎஸ்பி" மற்றும் "நாய் சேகர் ரிட்டன்ஸ்" உள்ளிட்ட படங்களில் நடித்த ஷிவானி நாராயணன், இறுதியாக "பம்பர்" என்கின்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த சில காலங்களாகவே இவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.