- Home
- Gallery
- Pooja : மிஸ் கோவையை ஞாபகம் இருக்கா? 40 வயதிலும் குறையாத அழகு - ஸ்லீவ்லெஸ்ஸில் அசத்தும் பூஜா - Hot Clicks!
Pooja : மிஸ் கோவையை ஞாபகம் இருக்கா? 40 வயதிலும் குறையாத அழகு - ஸ்லீவ்லெஸ்ஸில் அசத்தும் பூஜா - Hot Clicks!
Actress Pooja Ramachandran : கோவையில் பிறந்து, பண்பலை தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி அதன் பிறகு பல மொழிகளில் நல்ல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பூஜா ராமச்சந்திரன்.

Pooja
பெங்களூரில் பிறந்திருந்தாலும், தனது தந்தை ராணுவ வீரர் என்பதால் அடிக்கடி வெவ்வேறு ஊர்களுக்கு பயணித்து வந்த பூஜா ராமச்சந்திரன் கோவையில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.
Pooja Ramachandran
அதன் பிறகு அழகி போட்டிகளில் பங்கேற்க தொடங்கிய பூஜா ராமச்சந்திரன், கடந்த 2004ம் ஆண்டுக்கான "மிஸ் கோயம்புத்தூர்" பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. 2005ம் ஆண்டு "மிஸ் கேரளா" போட்டிகளிலும் இவர் இரண்டாம் இடம் பிடித்தார்.
Actress Pooja
கடந்த 2011ம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான "ஏழாம் அறிவு" திரைப்படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார். தொடர்ச்சியாக தமிழில் "நண்பன்", "பீட்சா", "நண்பேன்டா" மற்றும் "காஞ்சனா 2" உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர், இறுதியாக தமிழில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான "அந்தகாரம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
Actress Pooja Ramachandran
தற்பொழுது தெலுங்கு திரையுலகிலும் பயணித்து வரும் பூஜா ராமச்சந்திரன், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த 2019ம் ஆண்டு பிரபல நடிகர் ஜான் கொக்கன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.