- Home
- Gallery
- இவங்களுக்கு இவ்வளவு பெரிய பசங்களா? செம யங்கா இருக்காங்கப்பா - கோவாவில் Fun Modeல் வந்தனா ஸ்ரீகாந்த்! Cute Pics
இவங்களுக்கு இவ்வளவு பெரிய பசங்களா? செம யங்கா இருக்காங்கப்பா - கோவாவில் Fun Modeல் வந்தனா ஸ்ரீகாந்த்! Cute Pics
Vandana Srikanth Family Photos : பிரபல தமிழ் திரை உலக நடிகர் ஸ்ரீகாந்த் அவர்களுடைய மனைவிதான் வந்தனா ஸ்ரீகாந்த் இந்த ஜோடிக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது.

Actor Srikanth
கடந்த 2002ம் ஆண்டு தமிழில் வெளியான "ரோஜா கூட்டம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய நடிகர் தான் ஸ்ரீகாந்த். விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்கள் முன்னணியில் இருந்த காலத்திலேயே, இவர் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தோடு பயணித்து வந்தார்.
Vandana
இவருடைய நடிப்பில் வெளியான "ஏப்ரல் மாதத்தில்", "மனசெல்லாம்", "பார்த்திபன் கனவு", "வர்ணஜாலம்" மற்றும் "போஸ்" உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் திரைப்படங்களாக மாறி வந்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டு இவர் வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
Srikanth Son and Daughter
கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் இந்த ஜோடிக்கு, 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Vandana Srikanth
அண்மையில் தனது கணவர் மற்றும் குழந்தைகளோடு கோவா சென்றிருந்த வந்தனா ஸ்ரீகாந்த் அவர்கள், அங்கு எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.