- Home
- Gallery
- Vidaamuyarchi : அஜித்தின் விடாமுயற்சி இந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா? செம சுவாரஸ்யமான கதையா இருக்கே..
Vidaamuyarchi : அஜித்தின் விடாமுயற்சி இந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா? செம சுவாரஸ்யமான கதையா இருக்கே..
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படம், பிரபல ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. அந்த ஹாலிவுட் படத்தின் கதைக்களம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கி வரும் விடா முயற்சி படத்தில் அஜித் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள குட் பேட் அக்லி என்ற படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.
இந்த சூழலில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் சில இந்த படம் பிரேக்டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Ajith Kumars Vidaa Muyarchi
பிரேக்டவுன் என்பது 1997 ஆம் ஆண்டு ஜொனாதன் மோஸ்டோவ் இணைந்து எழுதி இயக்கிய ஒரு அமெரிக்க த்ரில்லர் படமாகும். இப்படத்தில் கர்ட் ரஸ்ஸல், ஜே.டி. வால்ஷ் மற்றும் கேத்லீன் குயின்லன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Vidamuyarchi Movie
இந்த படத்தில், ஜெஃப் (கர்ட் ரஸ்ஸல்) மற்றும் ஏமி டெய்லர் (கேத்லீன் குயின்லன்) தம்பதி நாடுகளை கடந்த பயணத்தை மேற்கொள்கின்றனர். அப்போது எதிர்பாராத விபத்து ஏற்படவே அதன்பிறகு அவர்கள் காரில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆள்நடமாட்டமில்லாத இடத்தில் ஒரு ட்ரக் ட்ரைவர், ஏமியை அருகில் உள்ள கஃபேவுக்கு அழைத்து செல்வதாக கூறுகிறார்.
Ajith Kumar Vidaa Muyarchi film update out
ஆனால் காரை சரிசெய்த உடன் அந்த கஃபேவுக்கு சென்று பார்க்கும் போது மனைவியை காணவில்லை. அந்த ட்ரக் டிரைவரும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட ஹீரோ மனைவியை தேடி கண்டுபிடித்தாரா என்பதே படத்தின் கதை. பிரேக்டவுன் டத்தின் ரீமேக்காக விடாமுயற்சி படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
Vidaamuyarchi
மகிழ் திருமேனி எழுதி இயக்கி வரும் இந்த படம் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, நிகில் சித்தார்த்தா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்திய தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமாகும். தல அஜித் குமார் நடிக்கும் இப்படத்தில் அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா கிருஷ்ணன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், நிகில் சித்தார்த்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Vidaamuyarchi
ஆக்ஷன் - த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வேதாளம் மற்றும் விவேகம் படங்களுக்குப் பிறகு அஜித்துடன் 3-வது முறையாக அனிருத் இணைகிறார்.
Vidaamuyarchi
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. இப்படம் தீபாவளி பண்டிகை அல்லது இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.