‘அமைதிப்படை’ அல்வா சீனில் அத்துமீறினாரா சத்யராஜ்..? சர்ச்சை பதிவுக்கு கஸ்தூரி கொடுத்த பரபரப்பு விளக்கம்
அமைதிப்படை படத்தில் சத்யராஜ் உடன் அல்வா சீனில் நடித்தபோது கசப்பான அனுபவங்கள் இருந்ததா என்பது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.
kasthuri
நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அதுபோன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் பற்றி பேசிய பேச்சுகள் எல்லாம் தற்போது மீண்டும் வைரலாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ராஜா ராணி படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் நடிகர் சத்யராஜ், நடிகை நயன்தாரா குறித்து பேசியது நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டு வந்தது.
Actress Kasthuri
அதில் ஹீரோயின்களுக்கு அப்பாவாக நடிக்கும் போது அந்த நடிகைகள் அப்பாவை கட்டிப்பிடித்து அழும்படியான காட்சிகள் வைக்க வேண்டும் என கூறி இருந்தார். அவர் காமெடியாக சொன்ன இந்த விஷயத்தை அப்போது அந்த விழாவில் கலந்துகொண்ட் நடிகை நயன்தாராவே கைதட்டி ரசித்தார். ஆனால் அந்த பேச்சு தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன் ஒருவர் நடிகை கஸ்தூரியை டேக் செய்து, அமைதிப்படை படத்தில் அல்வா சீனில் அவர் அத்துமீறி இருப்பது போல் தோன்றுகிறது. இதுபற்றி நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என கூறி இருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
kasthuri about amaidhi padai movie
இதற்கு நடிகை கஸ்தூரி பதிலளித்து போட்ட பதிவில், சத்யராஜ் ரொம்ப நல்லவர். அந்த அல்வா சீன் எனக்கு நியாபகம் இருக்கிறது. அந்த சீனில் எனக்கு அசெளகரியமாக இருப்பதை அறிந்துகொண்டு சத்யராஜும் மிகவும் ஜாக்கிரதையாக நடித்திருந்தார். அந்த காட்சியை மட்டும் படமாக்க 4 மணிநேரம் ஆனது. நாங்கள் இதை வெறும் நடிப்பாகவே பார்த்தோம். அந்த சீன் எடுக்கும்போது என் அம்மாவும் அங்கு இருந்தார்.
kasthuri X post
ஒரு காட்சியை படமாக்கும் போது மணிவண்ணன் சாரும், சத்யராஜ் சாரும் எப்படி டயலாக்கை மெருகேற்றுகிறார்கள் என்பதை பார்த்து என் அம்மாவே ஆச்சர்யப்பட்டார். அந்த சீனில் அவர் மோசமாக நடந்துகொள்ளவில்லை. அமைதிப்படை படத்தில் சத்யராஜ் உடன் நடித்தது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. அல்வா சீன் உள்பட அந்த படத்தில் நடித்த ஒவ்வொரு சீனையும் நினைத்து நான் பெருமைகொள்கிறேன்” என சர்ச்சைக்கு கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... மகன் பட பூஜையில் ஆப்சென்ட் ஆன விஜய் சேதுபதி... அவர் வேற நான் வேறனு சொல்லி ஷாக் கொடுத்த சூர்யா