MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தீபாவின் கள்ளக்காதல் குறித்து சிக்கிய ஆதாரம்.. கைதாகிறாரா ராஜேஸ்வரி? கார்த்திகை தீபம் சீரியலில் செம்ம டுவிஸ்ட்

தீபாவின் கள்ளக்காதல் குறித்து சிக்கிய ஆதாரம்.. கைதாகிறாரா ராஜேஸ்வரி? கார்த்திகை தீபம் சீரியலில் செம்ம டுவிஸ்ட்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் எடிட்டர் ரவியை கூட்டிட்டு வந்து உண்மையை நிரூபிப்பதாக சவால் விட்ட நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

2 Min read
Author : Ganesh A
Published : Mar 13 2024, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai deepam serial

Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் எடிட்டர் ரவியை கூட்டிட்டு வந்து உண்மையை நிரூபிப்பதாக சவால் விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது ராஜேஸ்வரி எடிட்டரை தூக்கிவிட கார்த்திக் ஒரு வழியாக அவனை கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டுவந்து நிறுத்துகிறான். ஆனால் ராஜேஸ்வரி இவர் யார் என்று எனக்குத் தெரியாது என்று ட்ராமா போட ரவி ராஜேஸ்வரி தான் தீபாவும் ரக்ஷனும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களை அனுப்பி நியூஸ் போட சொன்னது என்ற உண்மையை ஆதாரத்துடன் நிரூபிக்கிறான். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Zee Tamil Karthigai deepam serial

Zee Tamil Karthigai deepam serial

இதனால் அபிராமி அதிர்ச்சி அடைந்து ஒரு பொண்ணோட வாழ்க்கையில இப்படி விளையாடி இருக்கீங்களே, இந்த வீட்டு சம்மந்தியா இருந்துட்டு நீங்க இப்படி செய்யலாமா என்ற கேள்வி கேட்க ஆளாளுக்கு ராஜேஸ்வரியை பிடித்து திட்டித் தீர்க்கின்றனர். கடைசியாக ராஜேஸ்வரி தப்பை ஒப்புக்கொண்டே மன்னிப்பு கேட்க கார்த்திக் அவர்களே உண்மையை ஒத்துக்கிட்டாங்க கூட்டிட்டு போங்க என்று போலீசை கூப்பிட்டு ராஜேஸ்வரி கைது செய்ய சொல்ல அபிராமி ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கிறார் இந்த நேரத்துல இவங்கள கைது பண்ணா அது நல்லா இருக்காது என சொல்லி ராஜேஸ்வரியை காப்பாற்றுகிறார். 

இதையும் படியுங்கள்... சோசியல் மீடியா கிங் என நிரூபித்த விஜய்... எக்ஸ் தளத்தில் தளபதி படங்கள் படைத்த தரமான சாதனைகள்

34
Karthigai deepam serial Update

Karthigai deepam serial Update

கார்த்திக் தர்மலிங்க மாமாவுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு வேண்டிக்குங்க அவருக்கு ஏதாவது ஆச்சு உங்களை சும்மா விடமாட்டேன் என வார்னிங் கொடுத்து விட இன்ஸ்பெக்டர் எனக்கு இதுல உடன்பாடு இல்லை கார்த்திக் நீங்க சொல்றதுனால அவங்கள விட்டுட்டு போறேன் என கிளம்பி செல்கிறார். பிறகு அருண் ராஜேஸ்வரி ரூமுக்கு வந்ததன் ஏன் இப்படி எல்லாம் பண்ணி ஒவ்வொரு முறையும் கார்த்திக் கிட்ட அவமானப்பட்டு நிற்கிறீங்க. ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதினால் தான் நீங்க தப்பிச்சீங்க இல்லனா உங்க கதி என்னவாகி இருக்கும் என திட்டுகிறான். 

44
Karthigai deepam serial Today Episode

Karthigai deepam serial Today Episode

அடுத்து தீபா கார்த்திக்கு போன் செய்து நான் இன்னிக்கி ஹாஸ்பிடல் தங்கிடுறேன் நாளைக்கு வரும்போது எனக்கு ஒரு படம் மட்டும் எடுத்துட்டு வாங்க என்று சொல்ல கார்த்திக் கபோர்ட் திறந்து பார்க்க அதில் அவனது கல்யாண பத்திரிக்கையில் நட்சத்திராவின் பெயரை அழித்துவிட்டு தீபா என எழுதி இருப்பதை பார்த்து மீனாட்சியிடம் என்ன விஷயம் என்று கேட்க கல்யாணத்துக்கு முன்னாடி தீபாவுக்கு உங்க மேல காதல் இருந்தது ஆனா அவ தான் அதை வெளியில் சொல்லல என்ற உண்மையை உடைக்கிறாள். 

அதுமட்டுமின்றி பெங்களூர் போயிருந்தபோது கோவிலில் தாலி வந்து தீபாவின் கழுத்தில் விழுந்த விஷயத்தையும் சொல்கிறாள். இதனால் கார்த்திக்கு தீபாவின் காதல் குறித்த விஷயம் தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... மஞ்சும்மல் பாய்ஸுக்கு சோலி முடிஞ்சது... ரெட் ஜெயண்ட் உதவியுடன் தமிழ்நாட்டில் ரிலீசாகும் மற்றுமொரு மலையாள படம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved