மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்.. தமிழக மீனவர்களை தாக்கி பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை

கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களை தாக்கி பல லட்சம் மதிப்புள்ள பொருட்களையும், மீன்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் திருடிய சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Sri Lankan pirates attacked Tamil Nadu fishermen and looted goods worth several lakhs KAK

மீனவர்களுக்கு அச்சுறுத்தல்

கடல் எல்லையை தாண்டியதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியும், கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் படகுகளை சிறைப்பிடித்து செல்வது ஒருபக்கம் என்றால் மறு பக்கம் மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து பொருட்களை இலங்கையை கடற்கொள்ளையர்கள் திருடி செல்லும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ராமேஸ்வரம் மற்றும் நாகையை சேர்ந்த மீனவர்களிடம் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற நிலையில் காவல்நிலையத்தில் புகார் செய்து வழக்கும் பதியப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் நேற்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜகவிற்கு எதிராக சீறும் நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது... அறிவிப்பு வெளியிட்ட திருமாவளவன்

மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்திலிருந்து என்.முருகன். என்பவருக்கு சொந்தமான  பைபர் படகில்,   முருகன் மற்றும் முருகவேல் முத்து சின்னையன் ஆகிய 3 மீனவர்கள் கடந்த 28ஆம் தேதி செருதூரிலிருந்து புறப்பட்டு  கோடியக்கரையில் இருந்து சுமார் 20 நாட்டிகல் தென் கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று மாலை நேரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு  ஸ்பீடு பைபர் படகில் வந்த, அடையாளம் தெரியாத 3 இலங்கை கடற் கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை கட்டை மற்றும்  கத்தியால்  தாக்கி , மீனவர்களிடம் இருந்த GPS 1, வாக்கி டாக்கி 1, வஞ்சிர மீன் சுமார் 40 கிலோ மற்றும் மீன்பிடிவலை ஆகியவற்றை பறித்து சென்றனர்.

பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை

இந்த நிலையில் இன்று அதிகாலை  03.00 மணிக்கு செருதூர் வந்த  மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்கு சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் அதில்  முருகன் என்பவருக்கு தலையில் காயம் மற்றும் இடது கையில் இரத்த காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது மற்ற 3 மீனவர்கள்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

10, 12 ஆம் வகுப்பு ரிசல்ட் எப்போது .? எந்த தேதியில் வெளியீடு.? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios