MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சோசியல் மீடியா கிங் என நிரூபித்த விஜய்... எக்ஸ் தளத்தில் தளபதி படங்கள் படைத்த தரமான சாதனைகள்

சோசியல் மீடியா கிங் என நிரூபித்த விஜய்... எக்ஸ் தளத்தில் தளபதி படங்கள் படைத்த தரமான சாதனைகள்

சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் கடந்தாண்டு அதிகம் பேசப்பட்ட படங்களின் டாப் 10 பட்டியலில் நடிகர் விஜய்யின் லியோ மற்றும் வாரிசு ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 13 2024, 02:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் விஜய், சோசியல் மீடியாவில் தனக்கு அதிக அளவு பாப்புலாரிட்டி இருப்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார். புகழ் பெற்ற சமூக வலைதளமான எக்ஸ் கடந்த ஆண்டு ஜனவரி 1ந் தேதியில் இருந்து 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை எடுக்கப்பட்ட தரவுகளின் படி எக்ஸ் தளத்தில் அதிகளவில் பேசப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அந்த பட்டியலில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் முதல் இடத்தையும், அவரின் வாரிசு திரைப்படம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இந்த பட்டியலில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து நான்காவது இடத்தில் நடிகர் அஜித்தின் துணிவு படம் இடம்பிடித்து உள்ளது. அதேபோல் ஷாருக்கான் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த ஜவான், பதான் மற்றும் டங்கி ஆகிய மூன்று திரைப்படங்களும் முறையே 5, 7 மற்றும் 8-ம் இடத்தை பிடித்திருக்கிறது. பிரபாஸின் அட்டர்பிளாப் படமான ஆதிபுருஷுக்கு 6ம் இடம் கிடைத்திருக்கிறது.

இதையும் படியுங்கள்... மஞ்சும்மல் பாய்ஸுக்கு சோலி முடிஞ்சது... ரெட் ஜெயண்ட் உதவியுடன் தமிழ்நாட்டில் ரிலீசாகும் மற்றுமொரு மலையாள படம்

34

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு இந்திய அளவில் டுவிட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்கின் டாப் 10 பட்டியலையும் வெளியிட்டு உள்ளனர். இதில் #newprofilepic ஹேஷ்டேக் தான் முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து இரண்டாம் இடம் #Crypto ஹேஷ்டேக்கிற்கு கிடைத்திருக்கிறது. இதையடுத்து எஞ்சியுள்ள 8 இடங்களில் 6 இடங்களை பொழுதுபோக்கு சம்பந்தமான ஹேஷ்டேக்குகள் தான் ஆக்கிரமித்து உள்ளன.

44

அந்த வகையில் நடிகர் விஜய் நடித்து வெளிவந்த லியோ படத்தின் ஹேஷ்டேக், 3ம் இடம் பிடித்துள்ளது. இதையடுத்து ஷாருக்கானின் ஜவான் மற்றும் பதான் ஆகிய திரைப்படங்களின் ஹேஷ்டேக் முறையே 5 மற்றும் 6-ம் இடத்தை பிடித்திருக்கிறது. 7ம் இடத்தில் பிரபாஸ் ஹேஷ்டேக்கும், 9ம் இடத்தில் ஆதிபுருஷ் ஹேஷ்டேக்கும் இடம்பெற்று உள்ளது. இறுதியாக 10வது இடம் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் ஹேஷ்டேக்கிற்கு கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... Nila Wedding Photos: 40 வயதில் காதலரை கரம் பிடித்த நடிகை நிலா! வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஷாருக் கான்
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved