MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரியாவின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வர கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

ரியாவின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வர கார்த்திக் போட்ட மாஸ்டர் பிளான் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்தியை வேற ஒரு கம்பெனிக்கு வேலைக்கு அனுப்ப திட்டம் தீட்டிய நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

2 Min read
Author : Ganesh A
Published : Apr 29 2024, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai deepam serial

Karthigai deepam serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் கார்த்தியை வேற ஒரு கம்பெனிக்கு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று ஐஸ்வர்யா, ரியா, ஆனந்த், அருண் ஆகியோர் கூட்டு சேர்ந்து முடிவு எடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது கார்த்திக் தீபாவை அழைத்துக் கொண்டு வெளியே வர, ஒரு தள்ளுவண்டி கடையை பார்த்து வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிட, தீபா நீங்க இந்த மாதிரி கடையில எல்லாம் சாப்பிடுவீங்களா என்று கேட்க, நான் அடிக்கடி இந்த கடைக்கு வந்து இருக்கேன் என்று சொல்லி தீபாவை அழைத்துச் செல்கிறான். 

24
Zee Tamil Karthigai deepam serial

Zee Tamil Karthigai deepam serial

கடைக்காரர் கார்த்திக்கை பார்த்ததும் வாங்க கார்த்திக் சார் என்ன சாப்பாடு இங்க என்று கேட்க, கார்த்திக் பேப்பர் ரோஸ்ட் என்று சொன்னதும் தீபாவை பார்த்து இது யாரு புதுசா இருக்காங்க என்று கேட்கிறார். அதன் பிறகு கார்த்திக் இது தீபா என்னுடைய மனைவி என அறிமுகம் செய்து வைக்கிறான். பிறகு தீபாவிடம் உங்களுக்கும் பேப்பர் ரோஸ்ட்டா என்று கேட்க, அவளும் ஆமாம் என்று சொல்கிறாள். பிறகு கார்த்திக் மற்றும் தீபா இடையே யார் ஆஃபாயிலை உடைக்காமல் சாப்பிடுறாங்கனு பார்க்கலாம் என்று போட்டி நடக்க, தீபா எனக்கு அதெல்லாம் சாப்பிடத் தெரியாது என்று சொல்ல, கார்த்திக் அவளுக்கு ஊட்டி விடுகிறான். 

இதையும் படியுங்கள்... கல்யாணம் முதல் தங்கலான் ரிலீஸ் வரை... ரசிகர்கள் அடுக்கிய கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்த மாளவிகா மோகனன்

34
Karthigai deepam serial Update

Karthigai deepam serial Update

பிறகு டைம் ஆகிவிட்டதால் ஆட்டோ கிடைக்காமல் இருக்க, தீபா நடந்தே போகலாம் என்று சொல்லி கூட்டி வருகிறாள். மேலும் தீபா எனக்கு குல்பி சாப்பிடணும் என்று சொல்ல, குல்பி கடைக்கு கூட்டிச் செல்ல, இங்கே எல்லோரும் ஜோடி ஜோடியாக வந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவதை பார்த்து தீபா புரியாமல் இருக்க, எதுக்கு எல்லாம் ஜோடி ஜோடியா இருக்காங்க என்று கேட்கிறாள். இதை பார்த்து அங்கே இருந்தவர்கள் சிரிக்க, கடைக்காரர் என்ன சார் நீங்க சொல்றீங்களா இல்ல நான் சொல்லட்டுமா என்று கேட்க, கார்த்திக் தீபாவின் காதில் எல்லாரும் லவ்வர்ஸ் என்ற விஷயத்தை சொல்கிறான். 

44
Karthigai deepam serial Today Episode

Karthigai deepam serial Today Episode

அடுத்ததாக ரியாவோட உண்மை முகத்தை வெளியே கொண்டு வரணும். ஆனந்த் அவளைப் பற்றி தெரிந்து கொள்ள அவ கிட்ட இருந்து விலகி வந்து மீனாட்சி அண்ணியோட சேர்ந்து வாழ்வான். அதற்கான வேலைகளை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். மேடம் கார்த்திக் உங்களோடு வந்தா ஜாலியா இருக்கு, ஆனால் இப்படி இரண்டு பேரும் ஒண்ணா வெளிய வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு என பேசுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Samantha: கேக் முன்பு கண்களை மூடி அமர்ந்திருக்கும் அழகு சிலை.! சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved