MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 1 இல்ல.. 2 இல்ல.. ஆஸ்கர் வரை சென்ற 7 படங்களில் நடித்த முதல் இந்திய நடிகர்.. அதுவும் ஒரு தமிழ் நடிகர்!

1 இல்ல.. 2 இல்ல.. ஆஸ்கர் வரை சென்ற 7 படங்களில் நடித்த முதல் இந்திய நடிகர்.. அதுவும் ஒரு தமிழ் நடிகர்!

ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட 7 படங்களில் நடித்த முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை பெற்ற தமிழ் நடிகர் யார் என்று தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
Published : Jul 16 2024, 09:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Kamalhaasan

Kamalhaasan

உலக நாயகன் கமல்ஹாசன் பன்முகத்திறமை கொண்ட ஆகச்சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வெறும் நடிகர் என்று மட்டும் அவரை சுருக்கிவிட முடியாது. இயக்குனர், நடனக் கலைஞர், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல பரிணாமங்களை கொண்டவர் தான் கமல்ஹாசன்.

29
Universal Hero Kamalhaasan

Universal Hero Kamalhaasan

தமிழ் மட்டுமின்றி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி என பல மொழிகளிலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தனது நடிப்பு திறமைக்காக தேசிய விருது, பிலிம்ஃபேர் விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

39
Kamalhaasan

Kamalhaasan

மேலும் சர்வதேச அளவில் பல விருதுகளுக்கும் அவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் திரைப்படத்துறையில் உயிரிய அங்கீகாரமாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு அவரின் பல படங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுகளுக்கு கமல்ஹாசன் பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், அவரது 7 படங்கள் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிசீலிக்கப்பட்டது.

49
Kamalhaasan

Kamalhaasan

இதன் மூலம் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட 7 படங்களில் நடித்த முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை கமல்ஹாசன் பெற்றுள்ளார். அதுவும் அவர் ஒரு தமிழ் நடிகர் என்பது கூடுதல் சிறப்பு.. ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட கமல்ஹாசன் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

59
Nayakan Movie

Nayakan Movie

நாயகன்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா, நாசர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் நாயகன். மும்பையின் அண்டர் வேர்ல்டு தாதா வரதராஜன் முதலியாரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படம் அமெரிக்கத் திரைப்படமான தி காட்பாதரால் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்டது.

69
Thevarmagan

Thevarmagan

தேவர்மகன்

பரதன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான படம் தேவர்மகன். இதில் கமல்ஹாசன், சிவாஜி கணேசன், நாசர், கௌதமி மற்றும் ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட இப்படம் கமல்ஹாசனின் வெற்றிப் படங்களில் ஒன்றாகும். 

79
Kuruthipunal

Kuruthipunal

குருதிப்புனல்

பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான குருதிப்புனல் படத்தில் கமல்ஹாசன், நாசர், அர்ஜுன், கௌதமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 995-ம் ஆண்டு ஆக்ஷன் த்ரில்லர் படமாக இந்த படம் உருவானது. 

89
Indian Movie 1995

Indian Movie 1995

இந்தியன்

ஷங்கர் இயக்கத்தில், 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த இந்த படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

99
Heyram

Heyram

ஹேராம்

கமல்ஹாசன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் கமல்ஹாசன், ராணி முகர்ஜி, ஷாருக்கான் மற்றும் வசுந்தரா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த படம் விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்தாலும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved