- Home
- Gallery
- கல்கி 2898 AD சம்பள விவரம்.. பிரபாஸ், அமிதாப், கமல்ஹாசன், தீபிகா படுகோன் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
கல்கி 2898 AD சம்பள விவரம்.. பிரபாஸ், அமிதாப், கமல்ஹாசன், தீபிகா படுகோன் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
கல்கி 2898 ஏடி படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் முழு சம்பளம் விவரம் வெளியாகி உள்ளது.

Kalki 2898 AD's Cast
நாக் அஸ்வின் இயக்கி வரும் கல்கி 2898 ஏடி படம் நாளை மறு தினம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சூப்பர் ஹீரோ பேண்டஸி படமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Kalki 2898 AD
இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். . சுமார் 600 கோடி என்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.
Kalki 2898 AD's Cast Fee
ஆனால் இந்த பட்ஜெட்டின் பெரும் பகுதி படத்தின் நடித்துள்ள உச்ச நடிகர்களுக்கு சம்பளத்திற்கே சென்றுள்ளது. அந்த வகையில் கல்கி 2898 ஏடி படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் முழு சம்பளம் விவரம் வெளியாகி உள்ளது.
Prabhas Salary for Kalki 2898 AD
அதன்படி கல்கி 2898 ஏடி படத்திற்காக பிரபாஸுக்கு ரூ.150 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்த படத்தில் ‘பைரவா’ என்ற கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார்.
Amitabh Bachan Salary for Kalki 2898 AD
மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான அஸ்வத்தாம கேரக்டரில் அமிதாப் இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க நடிகர் அமிதாப் பச்சன் ரூ. 18 கோடி கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
Kamalhaasan Salary for Kalki 2898 AD
உலக நாயகன் கமல்ஹாசன் கல்கி 2898 ஏடி படத்தில் கலி என்ற முக்கிய வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க கமல்ஹாசன் ரூ.20 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
Deepika Padukone Salary for Kalki 2898 AD
கல்கி 2898 கிபி படத்தில் தீபிகா படுகோன் தனித்துவமான கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க தீபிகா படுகோனுக்கு ரூ.20 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். அவரது கடைசிப் படமான ஃபைட்டருக்கு 15 கோடி சம்பளம் பெற்றிருந்தார்.
Disha Patani Salary for Kalki 2898 AD
பிரபல பாலிவுட் நடிகை திஷா படானியும் கல்கி 2898 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அவர் இந்த படத்தில் நடிக்க ரூ.2 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.