- Home
- Gallery
- சரத்குமார் வீட்டில் மட்டுமில்ல கலா மாஸ்டர் வீட்டிலும் களைகட்டிய திருமண கொண்டாட்டம் - ஒன்றுகூடிய கோலிவுட் Stars
சரத்குமார் வீட்டில் மட்டுமில்ல கலா மாஸ்டர் வீட்டிலும் களைகட்டிய திருமண கொண்டாட்டம் - ஒன்றுகூடிய கோலிவுட் Stars
நடன இயக்குனர்கள் கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டரின் சகோதரியின் மகன் திருமண விழாவில் கோலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

kala master Family wedding
தமிழ் திரையுலகில் முன்னணி டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர்கள் தான் கலா மற்றும் பிருந்தா மாஸ்டர். இதில் 1990 களில் கலா மாஸ்டர் கொடிகட்டிப்பறந்த நிலையில், தற்போது அவரது சகோதரியான பிருந்தா தான் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு டான்ஸ் கோரியோகிராப் செய்து வருகிறார்.
khushbu a kala master Family wedding
நடன இயக்குனர் என்பதை தாண்டி பல்வேறு நடன இயக்குனர்களையும் உருவாக்கி இருக்கிறார் கலா மாஸ்டர். தற்போது கோலிவுட்டில் டாப் டான்ஸ் மாஸ்டர் வலம் வரும் சாண்டி மாஸ்டர் கலா மாஸ்டரின் ஸ்டூடண்ட் தான். அதுமட்டுமின்றி மானாட மயிலாட என்கிற நடன நிகழ்ச்சி மூலம் பல்வேறு திறமையாளர்களை வெளிக்கொண்டுவந்துள்ளார் கலா மாஸ்டர்.
kala master Family wedding clicks
மறுபுறம் பிருந்தா மாஸ்டர், நடன இயக்குனராக மட்டுமின்றி இயக்குனராகவும் அறிமுகமாகி தன் திறமையை நிரூபித்து இருக்கிறார். அவர் இயக்கத்தில் முதன்முதலில் வெளிவந்த திரைப்படம் ஹே சினாமிகா. இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதையும் படியுங்கள்... Samantha : உடம்பை வில்லாக வளைத்து தரையில் சாகசம் செய்த நடிகை சமந்தா - வைரலாகும் வேறலெவல் வீடியோ
kala master sisters
இந்த நிலையில் கலா மாஸ்டரின் சகோதரியின் மகனான அரவிந்த் என்பவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த திருமணத்தில் ஏராளமான கோலிவுட் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
kala master Family wedding photos
குறிப்பாக கலா மாஸ்டரின் நெருங்கிய தோழியான நடிகை குஷ்பு, இந்த திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
kala master Family wedding sangeeth
இதுதவிர நடிகை பூர்ணிமா பாக்கியராஜ், ரம்பா, மீனா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலா மாஸ்டர் சகோதரியின் மகன் திருமணா விழாவில் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்... இவங்க மட்டும் எப்படி வயசாக ஆக யங்காயிட்டே போறாங்க.. த்ரிஷாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்..