- Home
- Gallery
- இவங்க மட்டும் எப்படி வயசாக ஆக யங்காயிட்டே போறாங்க.. த்ரிஷாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்..
இவங்க மட்டும் எப்படி வயசாக ஆக யங்காயிட்டே போறாங்க.. த்ரிஷாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்..
20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trisha Krishnan
20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் நடிகை என்றால் அது த்ரிஷா தான். இதனால் தான் அவர் சவுத் குயின் என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
Trisha pics
பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா படத்தில் முதலில் கமிட் ஆனாலும் மௌனம் பேசியதே படம் முதலில் வெளியானதால் அதுவே திரிஷா முதல் படமாக மாறியது. தல் படத்திலேயே தனது நடிப்பின் மூலமும் அழகின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் த்ரிஷா.
Trisha pics
இதை தொடர்ந்து மனசெல்லாம், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, ஆறு என பல படங்களில் நடித்தார். இதன் மூலம் குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், சூர்யா, சிம்பு, கமல், விக்ரம் என அப்போது டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார் த்ரிஷா.
Trisha latest pics
அபியும் நானும், விண்ணை தாண்டி வருவாயா, கொடி, 96, பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் த்ரிஷாவின் நடிப்பு பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது. நடிகை த்ரிஷா கடைசியாக லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
Trisha latest pics
தற்போது அஜித்தின் விடா முயற்சி, மணிரத்னம் – கமல் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் ஆகிய படங்களிலும் நடித்து த்ரிஷா வருகிறார். இவை தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
Trisha latest pics
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் த்ரிஷா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தும் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் த்ரிஷா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.
Trisha latest pics
அவரின் போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வரும் நிலையில், பலரும் அவரின் அழகை புகழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். வயதாக ஆக த்ரிஷா இளமையாகி கொண்டே போவதாகவும், அழகு என்றால் அது எப்போது தான் த்ரிஷா தான் என்றும் பதிவிட்டு வருகின்றன.