Junior Balaiah: கோலிவுட் கொண்டாட தவறிய அசாத்திய கலைஞன்... யார் இந்த ஜூனியர் பாலையா?
பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகனான ஜூனியர் பாலையா இன்று மரணமடைந்த நிலையில், அவரின் சினிமா பயணத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
junior Balaiah
தமிழ் சினிமாவில் காலம் கடந்த கொண்டாடப்படும் நடிகர்களில் டிஎஸ் பாலையாவும் ஒருவர். அந்த காலத்தில் இவரின் நடிப்புத் திறமையை பார்த்து எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான் நடிகர்களே நடுங்கியதுண்டு. அந்த அளவுக்கு ஒரு அசாத்திய கலைஞனாக வலம் வந்தார் பாலையா. நாடகங்களில் நடித்து பின் சினிமாவுக்குள் நுழைந்ததால் இவருக்கு நடிப்பு அத்துப்படியாக இருந்தது. வில்லன், காமெடியன், குணச்சித்திர வேடம் என எது கொடுத்தாலும் பர்ஸ்ட் கிளாஸாக நடித்து அசத்துவார் Junior Balaiah.
junior Balaiah passed away
பாலையாவுக்கு மொத்தம் மூன்று மனைவிகள். இவருக்கு மொத்தம் 7 பிள்ளைகள், அதில் ஒருவர் தான் ரகு. தந்தையைப் போல் எந்தவித கேரக்டர் கொடுத்தாலும் அசால்டாக நடித்து அசத்தும் இவர், பின்னர் தன் பெயரை ஜூனியர் பாலையா என மாற்றிக் கொண்டார். கமல் நடிப்பில் வெளிவந்த மேல்நாட்டு மருமகள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜூனியர் பாலையாவுக்கு இரண்டாவது படத்திலேயே சிவாஜி உடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சிவாஜியின் தியாகம், கமலின் வாழ்வே மாயம் என முன்னணி நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜூனியர் பாலையாவுக்குள் இருக்கும் நடிப்புத் திறமைக்கு தீனி போட்ட படமாக பிரியதர்ஷனின் கோபுர வாசலிலே படம் அமைந்தது. அதில் கார்த்திக், சார்லி, நாசர், ஜனகராஜ் ஆகியோரின் நண்பராக நடித்து அசத்தி இருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
junior Balaiah with Ajithkumar
பின்னர் கங்கை அமரன் இயக்கிய கிளாசிக் ஹிட் படமான கரகாட்டக்காரனில் ராமராஜனின் கரகாட்ட கோஷ்டியில் ஒருவராக நடித்த ஜூனியர் பாலையாவின் நடித்து கவனம் ஈர்க்கும் வகையில் இருந்தது.
ஜூனியர் பாலையாவை நன்கு பயன்படுத்திய இயக்குனர் என்றால் அது பாக்யராஜ் தான். முதன்முதலில் இவர்கள் கூட்டணியில் சுந்தரகாண்டம் திரைப்படம் வெளிவந்தது. இதில் பாக்யராஜை சண்முகமணி என ஜூனியர் பாலையா குறும்புத்தனமாக அழைப்பதை இன்று பார்த்தாலும் சிரிப்பு வரும். இதையடுத்து இவர்கள் காம்போவில் ராசுக்குட்டி, அம்மா வந்தாச்சு, வீட்ல விசேஷங்க போன்ற படங்கள் வந்தன. இதில் ஜூனியர் பாலையாவுக்கு நல்ல நல்ல கேரக்டர்களை வழங்கி அழகு பார்த்தார் பாக்யராஜ்.
TS Balaiah son junior Balaiah
சமுத்திரக்கனியின் சாட்டை, அஜித்துடன் நேர்கொண்ட பார்வை என இந்த காலத்து நடிகர்களுடனும் நடித்து அசத்திய ஜூனியர் பாலையா, சினிமாவை போல் சின்னத்திரையிலும் கலக்கி இருக்கிறார். இவர் நடித்த இரண்டு சீரியல்களுமே கிளாசிக் ஹிட்டான சீரியல்கள். அதில் ஒன்று சித்தி. அந்த தொடரில் விஸ்வநாதனாக நடித்திருந்தார் ஜூனியர் பாலையா, மற்றொன்று சின்ன பாப்பா பெரிய பாப்பா இப்படி சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் இவர் தனது நடிப்பு திறமையை காட்டினாலும், பாலையா அளவுக்கு ஜூனியர் பாலையாவை மக்கள் கொண்டாடத் தவறிவிட்டனர் என்பதே மறுக்க முடியாத உண்மை.
இதையும் படியுங்கள்... நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்