- Home
- Gallery
- Nayanthara : கேரவன் இல்ல.. ஆனா டிரஸ் மாத்தணும்.. நயன்தாரா என்ன செஞ்சாங்க தெரியுமா? பிரபலம் சொன்ன சீக்ரெட்..
Nayanthara : கேரவன் இல்ல.. ஆனா டிரஸ் மாத்தணும்.. நயன்தாரா என்ன செஞ்சாங்க தெரியுமா? பிரபலம் சொன்ன சீக்ரெட்..
கஜினி படத்தில் நயன்தாரா பணியாற்றிய போது நடந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பேசி உள்ளார்.

Nayanthara
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார்.
nayanthara
20 ஆண்டுகளுக்கும் மேல் ஹீரோயினாக நடித்து வரும் நயன் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகறார்.ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
actress nayanthara
இதே போல் மற்ற மொழிகளிலும் பல உச்ச நட்சத்திரங்களுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். அவர் ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 75-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.ர்.
பல காதல் தோல்விகளை சந்தித்து சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்ற 2 இரட்டை குழந்தைகள் உள்ளனர். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை நயன்தாரா அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அவர் தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே போல் மலையாள படம் ஒன்றிலும் கமிட்டாகி உள்ளார்.
இந்த நிலையில் கஜினி படத்தில் நயன்தாரா பணியாற்றிய போது நடந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பேசி உள்ளார். அப்போது “ கஜினி படத்தின் ஒரு காட்சி சென்னை ஒ.எம்.சி.ஏ கிரண்டில் படமாக்கப்பட்டது.
அப்போது வில்லன்கள் நயன்தாராவை துரத்துவது போன்ற காட்சியை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் படமாக்கி கொண்டிருந்தார். அப்போது நயன் அணிந்திருந்த சட்டை கொஞ்சம் ஆபாசமாக இருந்ததால் இயக்குனர் அந்த காட்சியை எடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.
வேறு சட்டை போட்டால் தன்னால் இந்த காட்சியை படமாக்க முடியும் என்றும் ஏ.ஆர். முருகதாஸ் கூறிவிட்டார். அப்போது நயன் கடைசி நிமிடத்தில் இப்படி சொன்னால் எப்படி, தன்னிடம் வேறு சட்டை இல்லை என்று, கேரவன் இல்லை என்றும் கூறி உள்ளார். மேலும் வேறு சட்டையை வாங்கி வரும் படியும் கூறியுள்ளார்.
உடனே ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குனர், பிளாட்ஃபார்ம் கடை ஒன்றில் ஒரு சட்டையை வாங்கி வந்துள்ளார். அதை வாங்கிக்கொண்ட நயன், தனக்கு கேரவன் இல்லாததால் காரின் பின்னால் சென்று மறைவில் நின்று சட்டையை மாற்றிக் கொண்டு வந்தார்” என்று தெரிவித்தார்.